யாழ்ப் பாணத்தில் நல்லூர் உட்பட பல கோவில்களில் திருவிழாக்கள் ஆரம்பமாகியுள்ள சூழலில் தென்பகுதிகளிலிருந்து வரும் சிங்கள சுற்றுலாப் பயணிகளின் தொகை அதிகரித்துள்ளது. பாடசாலை விடுமுறைக் காலமாகையால் தென்பகுதி சிங்கள மாணவர்களும் தங்கள் பெற்றோர் உறவினர்களுடன் அதிளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
வடக்கில் கிளிநொச்சி இரணைமடுக்குளம், ஆனையிறவு முகாம் பகுதிகள் என்பன தென்பகுதி சிங்கள மக்களின் அவதானத்திற்குரிய முக்கிய இடங்களாகவுள்ளன. வடக்கில் ஏ-9 பாதையின் ஓரங்களில் பல இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கி ஒய்வெடுப்பதற்கான இடங்கள், அவர்களுக்கான மலசலக்கூடங்கள் என்பன படைத்தரப்பால் அமைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் நல்லூர். நாகவிகாரை, காரைநகர் கசோரினா கடற்கரை, கீரிமலை, கந்தரோடை, செல்லச்சந்நதி, நயினாதீவு ஆகிய இடங்களில் அதிகளவான சுற்றுலாப்பயணிகளை தற்போது காணமுடிகிறது.