”அம்பாறை தமிழ் பிரதேசத்தில் அமைந்துள்ள மதுபான சாலைகள் உடனடியாக மூடப்பட வேண்டும்!” TNA MP பியசேன

jj.jpgஅம்பாறை தமிழ் பிரதேசத்தில் அமைந்துள்ள மதுபான சாலைகள் உடனடியாக மூடப்பட வேண்டும் எனக்கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

”அம்பாறை கரையோரத் தமிழ் பிரதேசங்களில் மட்டும் 15 இற்கும் மேற்பட்ட மதுபான சாலைகள் இருப்பதாகவும், சுனாமியினாலும் வன்முறைகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மேலும் நலிவடையச் செய்ய இம் மதுபான சாலைகள் துணை போகின்றன எனவும், இவை மூடப்படவேண்டுமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டங்களில் தமிழ் சிங்களப் பிரதேசங்களில் மட்டுமே மதுபான சாலைகள் அதிகமுள்ளன. தமிழ், சிங்கள தனவந்தர்கள் மட்டுமே இம் மதுபான சாலைகளை நடத்திவருகின்றனர். முஸலிம்கள் இவ்வாறான தொழிலில் ஈடுபடவில்லை. தமிழ் பிரதேசங்களை கருவறுப்பதற்காக அரசியல்வாதிகள் இதற்கான அனுமதியை வழங்கி வருகின்றனர்.

கல்முனையில் நகர மத்தியில் உயர்நீதிமன்றம். மாவட்ட நீதிமன்றம். ஆதார வைத்தியசாலை, உயர் கல்விநிலையம், ஆகியவற்றின் மத்தியில் மதுபான சாலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்துள்ளது. காரைதீவிலும் நாவிதன்வெளி, திருக்கோவில், ஆலையடிவேம்பு, ஆகிய பகுதிகளிலும் மதுபான சாலைகள் உள்ளன.

ஆனால், ஒரு முஸ்லிம் கிராமத்திலும் மதுபான சாலைகள் இல்லை எனபது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

அம்பாறை கரையோரப் பகுதிகளில் ஒரு தொழிற்சாலை உள்ளதா? அதற்கு அனுமதி வழங்கப்பட்டதா? என்றால் இல்லை. காரைதீவு கிராமத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க அனுமதி கேட்டு வருடக் கணக்காகின்ற நிலையில் இன்னும் அனுமதி இல்லை. ஆனால் மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இம்மதுபான சாலைகளால் தினமும் சண்டை சச்சரவுகள் இடம்பெறுகின்றன. பாடசாலை மாணவர்கள் கூட மதுப் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். அடிக்கடி வீதி விபத்துக்களும் எற்படுகின்றன. மதுவினால் பல குடும்பங்களில் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன.”

இவ்வாறு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • sahabdeen nana
    sahabdeen nana

    அம்பாறையில், பியசேனவின் சொந்த ஊரில் முதன், முதலில் (1976ல்) மதுசாலை திறந்தவரே பியசேனவின் உறவினர். இவர் ஒரு சிங்கள சகோதரர்.பியசேனவின் பக்கத்து வீட்டிலேயே இம்மது சாலை தொடங்கப்பட்டது. பல மூஸ்லீம், சிங்கள, தமிழ் சகோதரர்களின் குடிப்பழக்கத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவரும் இவரே. பின்னாளில் ஒரு வாகன விபத்தில் இவர் இரு கால்களையும் இழந்தார். காலை இழந்தும் பல வருடங்கள் மதுச்சாலையை நடாத்தினார்.வெரி குட். காலம் கடந்த ஞானோதயம். வாழ்க பியசேன.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தமிழருக்கா? சிங்களவருக்கா?? முன்னுரிமை வழங்க வேண்டுமென்றால் முதலில் பியசேனாவுக்கே வழங்க வேண்டுமென்று கூறுவோம். இலங்கை அரசியலை பொறுத்தவரை ஒருவருக்கொருவர் இனவெறியை ஏற்படுத்தியே குளிர்காயந்து கொண்டார்கள். இந்தசமூகத்தில் அந்தஸ்தைத் தேடுவதற்கும் ஆதாயம் பெறுவதற்கும் இது உகந்த வழி. உலகம் அடிபாதாளத்தை நோக்கி சறுக்கு வண்டியில் போய்கொண்டிருக்கிறது. இதில் விபச்சாரரம். மதுபானக்கடைகள் போன்றவற்றை காரணம் காட்டி முதாலிளித்துவத்திற்கு வக்காளத்து வாங்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் மதுபானத்திற்கு சீர்திருத்த வேலைத்திட்டங்களை கொண்டுவந்து கள்ளிறக்குவதற்கும் தடைசெய்தார்கள். கிராமிய ஏழைகள்-காலம் காலமாக கஞ்சி ஊத்திய தொழில்முறைக்கு மூடுவிழா நடத்தி வசதியுள்ளவன் தான் அதுவும் அரசியல் முகவராக இருக்க கூடியவர்தான் மதுபானத்தை “சப்பிளை” பண்ணமுடியும் என்ற நிலையை தோற்றிவித்தார்கள்.

    உலகத்தில் எந்தவொருநாடும் மதுபானத்தையோ விபச்சாரத்தையோ முழுமையாக தடைசெய்ததில்லை. இந்த இரண்டும் சமூகத்திற்கு நாகபாம்புவின் விஷம் மருந்தாகப் பாவிக்கப்படுவது போல சமூகத்திற்கு தேவையானவையே!. இதில் துர்பிரயோகம் பண்ணுபவர்களே பெரும் பகுதியானவர்கள். ஆகவே! குற்றத்தின் பிறப்பிடங்கள் அழிக்கப்படவேண்டும். இன்றுள்ள நிலையில் விபச்சாரமோ மதுபானமோ தீங்குடையதில்லை. இதை விட கெடுதலுடையது இனவெறியைத் தூண்டிவிடுவதே! இதுவே மாபெரும் விஷம். இதை கக்கிக் கொண்டிருப்பவர்கள் சுரேஸ்பிரேமச்சந்திரன். கிளிநொச்சி மாஜிப்புலி சிவஞானம் சிறீதரன் போன்றவர்கள். இப்படியான கேள்விகளுக்கு புலம்பெயர் நாட்டிலிருந்து கருத்துச் சொல்வது உசிதமல்ல.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    இந்த மனிதனின் சிந்தனையை வஞ்சப்புகழ்ச்சி செய்த மேற்படி இரு கருத்தாளர்களும், அந்த மனிதனின் கருத்துகளை திரிபடையச் செய்ய முற்படுகிறார்கள்.
    சிங்கள பவுத்த பேரினவாதம் சிலருக்கு சர்க்கரை போட்டால், ஒடுக்கப்பட்டோரின் குரல் இனவெறியாகப் படுவதில் அதிசயம் ஒன்றுமில்லை.

    Reply
  • nantha
    nantha

    தற்போது பதவியிழந்துள்ள மேர்வின் சில்வாவும் லவுட் ஸ்பீக்கர் வாயிலாக தனது தொகுதியில் மதுபான நிலையங்கள் மூடப்பட வேண்டும் என்று எச்சரித்தார். இன்று மதுபான சாலைகள் பிரச்சனையா அல்ல மதுவிலும் கொடிய இனவாதம் பிரச்சனையா என்று பார்த்துக்கொள்வது நல்லது. அடுத்த தொகுதியில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதை யாரும் தடுக்க மாட்டார்கள். இவரின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால் “கள்ளச் சாராய” வியாபாரம் பெருகுமே ஒழிய மது உபயோகத்தைத் தடுத்து நிறுத்த முடியாது.

    தமிழ் நாட்டிலும் மகாத்மாகாந்தியின் குஜராத்திலும் மதுவிலக்கு தோற்றுப்போன விடயம்.

    இஸ்லாம் மதத்தின்படி மது “ஹராம்”. ஆனால் எத்தனை இஸ்லாமிய நாடுகளில் மது பாவனை இல்லை? சவூதி அரேபியாவில் அல்லது இரானில் மது அருந்திய சாதாரண மனிதனுக்குக் கசையடி கிடைக்கும். ஆனால் பெரிய ஹோட்டல்களில் நடக்கும் விருந்துகளில் அந்த நாட்டு பிரமுகர்கள் “தண்ணி” அடித்துவிட்டு பென்ஸ் காரில் ஓடி மறைவது சர்வ சாதாரணம்.

    எனவே நடக்க முடியாத ஒன்றை (தமிழீழம் போல) நடத்து என்று கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை!

    Reply