யாழ்ப் பாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகள் அடுத்த வருடத்திற்குள் முழுமையாக மீள்நிர்மானம் செய்யப்படும் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு வீடமைப்புத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 2010 தொடக்கம் 2011ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்குள் 2171 வீடுகள் மீள்நிர்மானம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 14 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும். முன்னுரிமை அடிப்படையில், மீளக்குடியேறிய சகல குடியிருப்பாளர்களுக்கும் வீடு, சேத மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 3இலட்சத்து 25 ஆயிரம் ரூபா ஐந்து கட்டங்களாக வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.