மேர்வின் சில்வாவின் நன் நடத்தை குறித்து விசாரணைகளை நடத்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மூன்று பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.
குறித்த குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஜெயந்த வீரசிங்கவும், செயலாளராக மஹிந்த சமரசிங்கவும், அங்கத்தவராக என்.எம்.மஹிந்த சமரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
chandran.raja
விசாரணைகள் தேவை தான். ஆனால் மேர்வின் சில்வா போன்றவர்கள் “காக்கா” பிடித்தே பதவிக்கு வந்தவர்கள்களாக தெரிகிறார்கள். காக்கா பிடிக்கிற சமாச்சாரம் பெரிய விடையம் இல்லைதான். இதை பற்றி கதைத்தால் தமிழனாகிய நான் என்னுடைய மூஞ்சிலேயே எனக்கு குத்த வேண்டும்.
காக்கா பிடிக்கிறது காலைப் பிடிக்கிறதிற்கு சுகந்திரக்கட்சி எந்த இடத்தையும் கொடுக்கக்கூடாது. ஏற்கவே மகிந்தராஜய பக்சா காலலடியில் மேர்வின் சில்வா காலைமடக்கி இருப்பதாக இணையத்தளத்தில் செய்தி வந்தது. மந்திரியாக இப்படித்தான் ஆகினாரோ! என்ற கேள்வியும் எழுகிறது. சுகந்திர கட்சியின் குழு விசாரணை நடத்துமாக இருந்தால் இவரை நாடுகடத்துவதற்கே முடிவெடுக்க முடியும். நாடுகடத்துவதாக இருந்தால் இருக்கிற ஒரு வழி மாலைதீவு அல்லது கச்சதீவு. இதில் ஒன்றைத்தான் தெரிவு செய்ய முடியும். விசாரணைக் குழுவின் முடிவையும் இருந்து பார்ப்போம். இறைச்சியை திண்டு எலும்பை கழுத்தில் தொங்கவிடுகிற முடிவுவாக இருக்கக் கூடாது.
Rohan
பார்க்கிற மாதிரியில் மகிந்த மேர்வினின் கையில் இருப்பதாகவே உணர முடிகிறது. அடாவடி அரசியலில் முனைப்பாக இருக்கும் ராஜபக்ச குடும்பத்தால் ஒரு சில்லறை மேர்வினை அடக்க முடியவில்லை என்று யார் தான் நம்புவார்கள்? எங்கேயோ ஒரு இடத்திலாவது மகிந்த இசகு பிசகாக மாட்டிக் கொண்ட போது மேர்வின் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கக் கூடும்.
சிறிமாவொ காலத்திலும் சந்திரிகா காலத்திலும் மேர்வின் அடித்த கூத்தும் சொல்லி முடியாது. எத்தனையோ நடந்த பின்பு வந்த ரூபவாகினி விவகாரத்துடன் கூட மகிந்தவுக்குத் தைரியம் வரவில்லை.
சிங்களப் பிரதேச மேடைகளில் மங்கள சமரவீரவின் பிறப்பின் சுத்தம் பற்றியும் படுக்கையறை விவகாரங்கள் பற்றியும் மேர்வின் தனது கலப்படம் அற்ற மொழியில் பேசுவதையெல்லாம் மகிந்த சிரித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்த்தை தெற்கு ஊடகங்கள் ஆவணப்படுத்தியிருந்தன.
Something is certainly wrong here!!