யாழ் ரயில் போக்கவரத்தை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் தண்டவாளங்கள் அமைக்கும் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவிற்கு அப்பால் சில மைல்கள் தூரம் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நீண்ட காலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக இருந்த பகுதிகளிலுள்ள தண்டவாளங்கள் அகற்றப்பட்டு ரயில் பாதை அமைந்திருந்த பகுதிகள் காடாகிப் போயுள்ளதால் அவற்றைப் புனரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த ரயில்பாதைகளுக்கு அருகில் வசிப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ரயில் தண்டவாளப் பகுதிகளில் குடியிருப்பவர்கள் அங்கிருந்த வெளியேறி ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.