ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் சியாவோயூ சாவோ இன்று 19-08-2010 காலை யாழப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வந்திருக்கும் இவர் இன்று யாழ். கோட்டை, பொது நூலகம் அகியவற்றைப் பார்வையிடுவதோடு, பிற்பகல் 4 மணிக்கு யாழ். செயலகத்தில் இடம்பெறும் கூட்டத்திலும் கலந்து கொள்வார்.
நாளை சாவகச்சேரியில் மின்விநியோக நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து வைப்பதுடன். கிளிநொச்சிக்குச் சென்று அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் சந்திக்கவுள்ளார்.
எதிர்வரும் சனிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச, நிதிதிட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம, மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.