சட்டத்தரணியின் வீட்டின் முன் வவுனியா பெண் தற்கொலை – மகளுக்கும் நஞ்சூட்டி கொலை செய்ய முயற்சி

வவுனியாவில் நெலும்குளம் பிரதேசத்தில் இருந்து தனது மகளுடன் கொழும்புக்கு வந்த தாய் பொல்ஹேன்கொட கிருலப்பனை பிரதேசத்தில் வசித்து வந்த பிரபல சட்டத்தரணியின் வீட்டின் முன்னால் தனது மகளுக்கு நச்சு விதையை உட்கொள்ள கொடுத்ததுடன் தானும் நச்சு விதையை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். ஆனால் 11 வயதான அவரது மகள் கொழும்பு சிறுவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியா நெலும்குளம்வைச் சேர்ந்த 36 வயதான புஷ்பராணி பத்ரகெளரி என்ற பெண்ணாவார். கிருளப்பனை பொல்ஹேன்கொட 162/11 என்ற இடத்தில் உள்ள வீட்டுக்கு தான் செல்வதாக வவுனியாவில் உள்ள பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுக்கு முறைப்பாடொன்றை செய்த பின் அப்பெண் நேற்று (19) ஆம் திகதி காலை மேற்குறிப்பிட்ட சட்டத்தரணியின் வீட்டுக்கு வந்துள்ளார்.

குறிப்பிட்ட சட்டத்தரணி வவுனியாவில் இருந்த காலத்தில் உயிரிழந்த பெண்ணின் காணி வழக்கொன்றில் நீதிமன்றத்தில் தோன்றியுள்ளார்.

அப்போது சட்டத்தரணிக்கும் அப்பெண்ணுக்கும் ஏற்பட்ட உறவு காரணமாக அப்பெண் கர்ப்பம் அடைந்ததாகவும், அதற்கு நஷ்டஈடாக 5 இலட்சம் ரூபா வேண்டுமென்று அப்பெண் கேட்டுள்ளதாகவும், சட்டத்தரணி 2 இலட்சம் ரூபாவை கொடுக்க முன்வந்த போதும் அது போதாது என்று அப்பெண் கேட்டதாகவும் சட்டத்தரணி இதற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாகவே அவரது வீட்டின் முன் நச்சு விதையை உட்கொண்டு அப்பெண் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பாதிப்பிற்குள்ளாகி தற்கொலை செய்த பெண்ணின் விபரங்களை வெளியிடும் ஊடகங்கள், பாதிப்பை ஏற்படுத்திய சட்டத்தரணி பற்றிய விபரங்களை மூடிமறைப்பதில் காட்டும் ஆர்வம் வியப்பளிக்கின்றது.

    Reply
  • singam
    singam

    இரண்டு விடயங்கள் தெளிவு. ஒன்று சட்டத்தரணி சிங்கள இனத்தவர் அல்ல. மற்றது அவர் ஈ.பி.டீ.பி. இயக்கத்தைச் சேர்ந்தவருமல்ல. இல்லையென்றால் யாழ் குடாநாட்டுப் பத்திரிகைகளிலும் மற்றம் புலம்பெயர்ந்த மனித உரிமை ஊடகங்களிலும் இதேுவே இன்றைய முன்பக்கச் செய்தியாயிருந்திருக்கும்.

    வாழ்க தமிழ் ஈழம் ! வளர்க 13வது திருத்தச் சட்டம் !

    Reply
  • ராவணா
    ராவணா

    சிங்கம், சிறிதரனின் புகழ்பாடிய பின்னோட்டகாரர்கள் ஏன் இப்போ மவுனம் ஆனார்கள் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார்.

    Reply
  • கருணா
    கருணா

    சட்டதரணி என்டால் கூட்டணி அல்லது ரீஎன்ஏ எண்டுதான் நினைக்கவேணும்! வாழ்க தமிழ் தேசிக்காயகம்! வளர்க அப்புக்காத்துகளின் பம்மாத்துகள்!

    Reply
  • nantha
    nantha

    சிங்கம் சொல்வது சரியான விடயம். அந்த சட்டத்தரணியின் பெயரைக் கூட பிரசுரிக்க “தமிழ்” ஊடகங்கள் தயாரில்லை என்பதிலிருந்து அவர் தமிழ் விடுதலை வீரர்களுக்கு “ஒரு” வேண்டப்பட்ட நபர் என்பது தெளிவு. ஈ பீ டீ பி யை சேர்ந்தவர் என்றால் இந்நேரத்தில் ஒரு “பிரளயமே” உருவாகியிருக்கும். நம்ம “மனித” உரிமைக் கோஷ்டிகள், தமிழ் பெண் அமைப்புக்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு சன்னதமே ஆடியிருப்பார்கள். தேசமாவது அந்த சட்டத்தரணியை அடையாளம் கண்டு பெயரை வெளியிட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தேசமாவது குறித்த சட்டத்தரணியை அம்பலப்படுத்தி தனது ஊடக தர்மத்தை நிலைநாட்டுமென, நந்தாவைப் போல் நானும் எதிர்பார்க்கின்றேன்.

    Reply