ஈழப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியிருப்பதன் மூலம் இலங்கை தீவு முழுவதும் தனது சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளது ராஜபக்ச அரசு. சிங்கள பேரினவாதத்தின் வரலாற்றில் இக்காலகட்டத்தை மிக உயர்நிலை சகாப்தமாக பிரகடனப்படுத்தி தனது அடக்கு முறைகளை அனைத்துக் களங்களிலும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது பேரினவாத அரசு.
இன்று இலங்கையில் நடப்பது இனச்சுத்திகரிப்பின் உச்சக்கட்டம் என்பது புரிந்து கொள்ளத்தக்கது. இலங்கைத்தமிழர் என்னும் இனத்தின் ஆணிவேரையே அறுத்தெறியும் நடவடிக்கை.எமது அரசியல் உரிமையை பறித்து, எமது பிரதேசங்களில் எம்மை சிறுபான்மையினராக்கி, ஆதிக்க மொழிமூலமே எமது வாழ்க்கையில் முன்னேற்றம் அடையமுடியும் என்ற சூழலை உருவாக்கி, எமது சமூகத்தை சீரழியவிட்டு எம்மை ஒரு அடிமை மனநிலைக்கு கொண்டு செல்வது என்பதுதான் இந்த இனவெறியின் இன்றைய இலக்கு.
இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரைப் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் தமிழ் நாட்டின் ஜனநாயக மனிதாபிமான சக்திகளிடமிருந்தும் தனிமைப்படுத்தும் இலங்கை அரச பாசிசத்தின் நிகழ்ச்சி நிரல் இங்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஐம்பதாயிரம் மக்களைக் கொன்று போட்ட அரசிற்கு எதிராகப் போராட முன்வரும் ஒவ்வொரு மனிதர்களின் மீதும் இலங்கை அரசின் உளவியல் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. அப்பாவி மக்களை நாளாந்தம் அழிப்பவர்களை எதிர்த்துப் போராடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நிராகரிக்கக் கோருகிறார்கள்.
பலவகை ஒடுக்குமுறைகளையும் இன்று சந்தித்துவரும் முஸ்லிம் சமூகமும் மலையக சமூகமும் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சனையும் இதுதான். ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகங்களாகிய நாம் ஓரணியில் நின்று சிங்கள பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து செல்லும் அவசியத்தை இன்றைய காலம் வேண்டி நிற்கிறது.
தமிழீழ விடுதலை புலிகளை ஒடுக்குவது என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும் உலகின் யுத்த விதிமுறைகள் அனைத்தையும் மீறி காட்டுமிராண்டித்தனமாக அழித்ததில் இருந்து, இலங்கை அரசானது ஒடுக்குமுறையின் முன்னுதாரணமாக, உலகத்திற்கு ஆலோசனை வழங்கும் அனுபவசாலியாகத் தன்னை பிரகடனப்படுத்தி கொள்கிறது. சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்கி வாழும் பெருந்தேசிய இனம் சுதந்திரமாக வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. இருக்கப்போவதும் இல்லை. சிங்கள மக்களின் உரிமைகள் தமிழ் மக்களின் உயிர் பறிப்புடன் எப்படிக் கரைந்து போயின என்பதை சிங்கள மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.
இது யுத்த வெறிபிடித்து அலையும் ஓர் சர்வாதிகார அரசிற்கெதிரான போராட்ட கால கட்டம். இலங்கைத் தீவிலும் புலம்பெயர் சூழலில் வாழும் அனைத்து மக்களும் தமது நிலை சார்ந்து போராடவேண்டிய தருணம் இது. சமூகத்தில் அடிப்படை ஜனநாயகம் இன்றி எந்தப்போராட்டமும் அடுத்த கட்டத்திற்கு நகர்வது சாத்தியமற்றது.
அனைத்து மக்களே, ராஜபக்ச அரசிற்கெதிரான போரில் ஒன்றிணைவோம் போராட்ட சக்திகள் அனைவரும் பொது எதிரிக்கெதிராக ஒன்றிணைவோம். எம்மைப்போல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உரிமைக்காக போராடும் சக்திகளுடன் கைகோர்ப்போம். எமது போராட்டம் உலக அரங்கில் நடைபெறும் உரிமைப்போரின் ஓர் அங்கமாக மாறட்டும்.
லண்டனில் புதிய திசைகள் அமைப்பு இலங்கை அரசிற்கு எதிரான கீழ்க்காணும் முழக்கங்களோடும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது. அதே நாளில் தமிழ் நாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம், இதே நோக்கங்களுக்காக தமிழ் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றது.
இலங்கை இனவெறி அரசே,
இன அழிப்பை நிறுத்து!
தமிழர் பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து!
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானோரை விடுதலை செய்!
அரசியல் கைதிகளை சித்திரவதை செய்யாதே!
கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கே?
காலம்: 21/08/2010
நேரம்: 2 – 5 பி.ப.
இடம்: Richmond Terrace, Westminster
அருகாமை ரயில் நிலையம்: Westminster
Maheswaran
நல்ல முயற்சி, மக்களுக்காகத் தொடர்ந்து போராடுங்கள். புலத்துப் பூசாரிகள் என்ன சொல்கிறார்கள்?
கருணா
இலங்கை இனவெறி அரசே
இன அழிப்பை நிறுத்து!//
இது கொஞ்சம் ஓவராக தெரியேல்லை? இலங்கை அரசின் இனவெறிக்கு மேலாக யாழ் சாதி வெறி மோசமாக அடக்குமுறையை தற்போது செய்கிறது! அது தங்கள் கண்களுக்கு தெரியாதது ஏன்? புலிகள் புலம்பெயர் நாட்டில் போருக்கென சேர்த்த பணம் எங்கே? அது ஏன் இன்று புலிகளின் வன்முறைக்கு உள்ளான மக்களிற்கு உதவவில்லை என்ற கேள்வியும் இங்கே இல்லை! மீளவும் புலிவேசம் போடத் தயாராகும் நீங்கள் தயவு செய்து தாயக மக்களிற்கு என்ன தேவை என்பதை அறிந்து போராடுங்கள்! நீங்கள் அரசியல் செய்ய அந்த மக்களை பலியாக்காதீர்கள்! பழிக்குப் பழி ரத்தத்திற்கு ரத்தம் பதில் அல்ல! இன்றைய தேவை புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் நியாயமான தீர்வுக்கான போராட்டமுமே! புதிய திசைகள் பழைய பல்லவியை பாடுகிறது!
Maheswaran
திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களும் நில ஆக்கிரமிப்புகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இன அழிப்பு என்பது வெறுமனே கொலை செய்வது மட்டும் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
padamman
புதிய திசைகள்ளா? புலித்திசைகள்ளா? இன்றைய தேவை அனைவரும் இனைந்து அரசியல் தீர்வைநோக்கி செல்வதே நன்மை அதைவிட்டு இங்கிருந்து ராஜபக்ச அரசிற்கெதிரான போரில் ஒன்றிணைவோம் போராட்ட சக்திகள் அனைவரும் பொது எதிரிக்கெதிராக ஒன்றிணைவோம் என்பதெல்லாம் ஒரு ஏமாத்து வேலை.
கருணா
திட்டமிட்ட குடியேற்றங்கள் முஸ்லீம் பிரதேசங்களிலும் நடக்கிறது! அதுவும் தமிழ் பிரதேசமா? புலிகளால் அடித்துக்கைலக்கப்பட்ட முஸ்லீம்கள் இன்னமும் தமது சொந்த பிரதேசங்களுக்கு போக முடியதர் உள்ளனரோ அவர்களைப்பற்றி ஏன் புதிய திசைகள் மூச்சுவிடவில்லை! மீண்டும் புலிகளின் பாணியில் தமிழ் வெறியை காட்டும் இந்த வித போராட்டங்கள் எந்த பலனையும் கொண்டுவராது! மாறாக சமூகங்களிற்குள் மேலும் பிளவையே உருவாக்கும்! இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அளவிற்கடங்காது நடைபெறுகிறது! இலங்கையில் உள்ள மூவின மக்களும் இதனால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சமயத்தில் இலங்கையர் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து நமது நியாயமான போராட்த்தை எடுப்பதே சாலச்சிறந்தது! வெறும் தமிழ் இனவாதத்தை உருவேற்றும் இந்த வகையான நடவடிக்கைககள் எந்த பலனையும் தராது!
nantha
லண்டனில் எந்தப் புலிக்கூத்தையும் அடித்து இலங்கையில் ஆகப் போவது ஒன்றுமில்லை. ஆயினும் லண்டன் வாழ் தமிழர்கள் பல உண்டியல் கோஷ்டிகளை சந்திக்கும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது மாத்திரம் உண்மை!
கந்தையா
மகேஸ்வரன் புலத்துப் பூசாரிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறர்கள்? புரியவில்லை.
ஜெயராஜா
போராடுவோம் போராடுவோம்
இறுதிமூச்சு இருக்கும்வரை போராடுவோம்
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
ஜெனீவாவரை கேட்க உரக்கச் சொல்வோம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்
பக்கத்துவீட்டு ஆச்சி விளக்குமாத்தோடை வாற மாதிரித் தெரியுது
Ajith
இலங்கையில் உள்ள மூவின மக்களும் இதனால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சமயத்தில் இலங்கையர் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து நமது நியாயமான போராட்த்தை எடுப்பதே சாலச்சிறந்தது! வெறும் தமிழ் இனவாதத்தை உருவேற்றும் இந்த வகையான நடவடிக்கைககள் எந்த பலனையும் தராது!// karuna
What is the barrier for you to unite all three races to revolt against the oppression of the racist Rajapakse regime? Why yor are worried about others organising the protest against Sinhala Rajapakse regime? Do you think tamils are racist than sinhala and muslims? Why you are thinking tamils protest against normal Sinhalese. The protest is aagainst the blood thirsty Rajapakse regime who oppress all three races? It is the duty of all oppressed people to join with tamils to raise the voice against oppressors. If Sinhalese are prepared to lead the protest tamils will join with them.
கருணா
//What isthe barrier //Ajith
பரியரே தமிழ் தேசியம் தான்!
நாம் இனவாதம் சாதி வெறி மத வெறி கொண்டு சாமியாடிக்கொண்டிருப்பதே ஒரு பெரிய தடை! இந்த புதிய திசையின் போராட்ட அழைப்பின் முதல் வரியே பரயர் தான்.. சிங்களவர் திருந்தட்டும் அதற்கு பின் நாங்கள் திருந்துகிறோம் என்பதற்கு இது நாயகன் படம் இல்லை! சொல்ல நீங்கள் கமலஹாசனும் இல்லை! முதலில்ல நம்மை திருத்துவோம் பின்னர் சமூகம் தானாக திருந்தும். இதுவே யதார்த்தமும் நடைமுறைக்கும் சரி வரும்! மற்றவை கதைக்க நல்லாயிருக்கும்!!
Ajith
பரியரே தமிழ் தேசியம் தான்! /Karuna
நாம் இனவாதம் சாதி வெறி மத வெறி கொண்டு சாமியாடிக்கொண்டிருப்பதே ஒரு பெரிய தடை.
It is good that you are also part of the barrier.Caste and Relegious fundamentalism a mong Asians (Hundu’s, Muslims, Buddhists) has a history of million years. Tamil nationalism in Sri Lanka is born only after Sinhala nationalism. You are trying to put knot with two unrelated things.
கருணா
ஓ அது சரி சாதிப்பிரச்சனையாலை நீங்கள் பாதிக்கப்படாத படியால் அதன் தாக்கம் உங்களுக்கு புரிய நியாயமில்லைதான். மன்னிச்சுக்கொள்ளுங்கோ இதுக்கு பிறகும் உங்களோடை கதைக்க எனக்கு தகுதி இல்லை!
palli
//முதலில்ல நம்மை திருத்துவோம் பின்னர் சமூகம் தானாக திருந்தும். இதுவே யதார்த்தமும் நடைமுறைக்கும் சரி வரும்! மற்றவை கதைக்க நல்லாயிருக்கும்!!//
ஏன் வியாபாரத்துக்கும் நல்லாய் இருக்கும் நடைமுறைக்கு மட்டும் தகுந்ததல்ல;
கருனா உங்கள் கருத்து மிக சரியே,
thirumal
பல்லி நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. புதிய போராட்டங்கள் வியாபாரத்திற்கு நல்லாய் இருக்கும் என சொல்லுகிறீர்களா? நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அண்மையில் “டான்” பிரமுகர் கைது சிலருக்கு நல்ல வருமானமாம். இனி இப்படி நிறைய நடக்கும் என காதைக் கடிக்கிறார்கள். இது பற்றி கொஞ்சம் விபரமாக தேசம் வாசகர்களுக்கு சொல்லக் கூடாதா?
Ajith
ஓ அது சரி சாதிப்பிரச்சனையாலை நீங்கள் பாதிக்கப்படாத படியால் அதன் தாக்கம் உங்களுக்கு புரிய நியாயமில்லைதான். மன்னிச்சுக்கொள்ளுங்கோ இதுக்கு பிறகும் உங்களோடை கதைக்க எனக்கு தகுதி இல்லை!
Dear Mr Karuna,
What a conclusion. Did I say that I was not affected by caste problem. I am not belong to a high caste or high social class. I suffered a lot because of the caste system. But I never believe on the caste system. You don’t need to depend on the high caste for your needs. It is all depend on you rather than continue to blame on others. For example, how many castes are their in our society. Which one is high and which one lowest. The top one oppress all others. The second top oppress all other castes below them. This goes on until you reach the final individual. Is there unity among those who are oppressed by the top one.
Ask yourself what did you do to liberate yourself from the oppressed caste system. It is your inferiority complex still makes you think that you are belongs to a lower caste system. First, you change your mentality before advising others. Then society will change.