ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நேற்று நடைபெற்றதுடன், பரீட்சை மண்டபத்தில் விடைகளை மாணவர்களுக்கு வழங்கிய குற்றத்திற்காக மூன்று ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
கொழும்புக்கு வெளியே இவ்வாறு நடைபெற்றுள்ளதுடன் சம்பந்தப்பட்ட மூன்று ஆசிரியர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 2744 பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைகள் நேற்று நடைபெற்றதுடன், ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் செம்டம்பர் 4ம் திகதி ஆரம்பமாகுமென குறிப்பிட்ட அவர் அதற்கான சகல ஏற்பாடுகளையும் பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ள தாகவும் தெரிவித்தார்