அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக அரச- எதிரணி தலைவர்கள் ஆராய்வு

imp.jpgஅரச எதிர்க்கட்சித் தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று திங்கட்கிழமை மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றதாகவும் அதன்போது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக சுமார் ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்றஉறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் எதிர்க்கட்சித் தரப்பில் இதில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் பங்கேற்றனர்.

விரைவில் அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதற்கான துரித ஏற்பாடுகளை மேற்கொண்டுவரும் அரசாங்கம் அரசியலமைப்புத்திருத்தம் தொடர்பிலான செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி தலைமையிலான குழு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எதிரணிக் குழுவுடன் நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளது.

நேற்று மாலை 3.30 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பு மாலை 5 மணிவரை இடம்பெற்றதாகவும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஆராயும் குழுவினால் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் பிரகாரம் அரசியலமைப்புத் திருத்தம் ஆரம்பகட்ட ஏற்பாடுகள் அடுத்த மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏதுவான இணக்கப்பாடு நேற்று எட்டப்பட்டதாக ஜனாதிபதி செயலக வட்டாரம் தெரிவித்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    சிங்கள, முஸ்லிம், போர்த்துக்கேய பரம்பரையினருக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு ஏற்பட்டு, அரசியலமைப்பு திருத்தம் செய்வது வரவேற்கத்தக்கது. ஆனால் இயங்காத இணையத்தளத்தை(http://www.slmc.lk/) இலங்கையில் வைத்திருக்கிற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ன ஆளுமையை கொண்டிருக்கப் போகிறது? இவர்களுக்கு லண்டந்தான்(http://www.slmc.org.uk/index.html) மெக்காவா?

    Reply