ஜீ.எஸ்.பி. சலுகையை நீக்கியதால் -இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

ஜீ. எஸ். பி. சலுகையை ஐரோப்பிய யூனியன் மீளப் பெற்றுக்கொண்டமை இலங்கைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒரு தொழிற்சாலையாவது மூடப்படவில்லை என்பதுடன் ஒரு தொழிற்சாலை ஊழியராவது வேலையை இழக்கவும் இல்லை என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறுகிறார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார். ஒரு சில தொழிற்சாலைகள் அண்மைக் காலத்தில் மூடப்பட்டன. அதிக சம்பள பிரச்சினை, கடுமையான தொழில் சட்டம், முகாமைத்துவத்தின் பிணக்குகள் காரணமாகவே அவை மூடப்பட்டதேயொழிய ஜீ.எஸ்.பி. சலுகை மீளப்பெறப்பட்டதன் காரணமாக அல்ல என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

முதலீட்டு சபையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் தற்போது உள்ள 7400 வேலை வாய்ப்புகள் இதனை உறுதிப்படுத்துவதாகவும் பிரதி அமைச்சர் கூறினார். ஜீ.எஸ்.பி. சலுகை மீளப்பெறப்பட்டதன் காரணமாக ஆடைக் கைத்தொழில் துறையில் ஈடுபட்டிருந்த சில தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக கூறப்படுவதை பிரதி அமைச்சர் நிராகரித்தார்.

ஐரோப்பிய யூனியன் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் அரசாங்கம் இணங்கப்போவதில்லை என்று கூறிய பிரதி அமைச்சர், ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள நிபந்தனைகள் நாட்டின் நற்பெயருக்கு பங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் தைத்த ஆடைகளில் 70 சதவீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஜீ. எஸ். பி. சலுகை மீளப்பெறப்பட்டதால் எமது நாடு மட்டுமே பாதிக்கப்படும் என்று கூறுவது சரியல்ல. எமது உற்பத்திகளை வாங்குவோர் அவற்றுக்கான விலைகளை கொடுக்கும்போது அவர்களும் மோசமாக பாதிக்கப்படும் நிலை இருப்பதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    எனக்கென்னமோ பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் கருத்தைப் படிக்க, முன்பு பாடசாலையில் படித்த நரியும் திராட்சைப்பழமும் கதைதான் ஞாபகம் வந்தது. சீ சீ இந்தப் பழம் புளிக்கும்……..

    Reply
  • பல்லி
    பல்லி

    //சீ சீ இந்தப் பழம் புளிக்கும்……..//
    பார்த்திபன் அதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்: காரணம் சில மாதங்களுக்கு முன்பு வெளியுறவு மந்திரி (பீலிக்ஸ்) இந்த சலுகை பற்றியும் அதன் தடைபற்றியும் கருத்து சொன்னபோது, இது தடையல்ல தாமதமே நாம் எமது நிலைபாட்டை சொல்லி விட்டாம் ஐரோப்பிய யூனியன் எமது கருத்தை ஆய்வு செய்து நமக்கு சாதகமான செய்தியை அறிவிக்கும்; அதுவரை நாம் பொறுமைகாப்போம் என போட்டியாய் பேட்டி கொடுத்துவிட்டு இன்று பழம் புளிக்கும் என இன்னொருவர் சொல்லுவது நம்பினோம் கைவிட்டு விட்டார்கள் என ஏங்குவது தெரிகிறது; இப்போது அரசின் பேட்டிகளை பார்த்தால் அன்று நம்ம புலிகள் தளபதிகள் எடக்கு மடக்காய் பேட்டி கொடுத்ததுதான் நினைவு வருகிறது; அன்று புலி;;; இன்று சிங்கமோ;;;;

    Reply