வன்னியில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் காணப்படும் வெடிபொருட்களால் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்ணி வெடிகள் மிதிவெடிகள் அகற்றப்பட்டப் பின்னரே மக்கள் மீளக்குடியமாத்தபட்டு வருகின்ற போதும் சில வெடிபொருட்கள் கண்களுக்குப் புலப்படாத வகையிலுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.
மரங்களிலும், நிலத்திலும் புகுந்த நிலையில் வெடிக்காத நிலையில் சில எறிகணைகள் சில பகுதிகளில் காணப்படுகின்றன. இவை வெடிபொருட்கள் என அறியாத சிறுவர்கள் இவற்றைப் பரிசோதிக்க முயலும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன் இதனால் பெற்றோர் மிக அவதானமாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சில விடுகளின் சுவர்களில் பெரிய சுடுகலன்களின் தோட்டாக்கள் வெடிக்காத நிலையில் காணப்படுகின்றன. வீட்டு முற்றங்கள,; காணிகளை துப்புரவாக்கி தீமூட்டுகின்றபோது அதற்குளிளிருந்தும் வெடிபொருட்கள் வெடிக்கும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள தருமபுரம், கட்டைக்காடு, விசுவமடு முதலான பகுதிகளில் வீடுகளுக்கு அருகாமையிலும் பொதுமக்களால் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.