அரச இலவச மருந்தை மோசடி செய்வோருக்கு ஆயுள் தண்டனை – சட்டத்திருத்தம் விரைவில் வருகிறது

mini.jpgஅரசாங் கத்தினால் நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மருந்து வகைகளைத் தனியார் மருந்தகங்களுக்கு சட்ட விரோதமான முறையில் வழங்குபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவிருக்கின்றது.

இம்மருந்து வகைகளைக் கொள்வனவு செய்து விற்பனை செய்யும் தனிநபர்களுக்கும் இத்தண்டனையை விதிக்கக் கூடிய வகையில் சட்டம் திருத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரச ஆஸ்பத்திரிகளில் நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஒரு தொகை மருந்து வகைகளை புறக் கோட்டையிலுள்ள தனியார் மருந்தகமொன் றுக்கு நபரொருவர் வழங்கியுள்ளார். இந் நபருக்கும், இம் மருந்து வகைகளை கொள்வனவு செய்த தனியாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

இதற்கு ஏற்ற வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை மருந்துப் பொருள் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் வருடாந்த அமர்வு நேற்று முன்தினம் கொழும்பில் நடை பெற்றது. இந்த அமர்வில் பிரதம அதிதி யாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்று கையில், அரசாங்க ஆஸ்பத்திரிகளில் நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கப் படும் மருந்து வகைகளின் ஒரு தொகுதி புறக்கோட்டையில் தனியார் மருந்தக மொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட் டிருந்த சமயம் இரு வாரங்களுக்கு முன் னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர் பான புலன்விசாரணையை குற்றப் புல னாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

“எமக்கு இந்த மருந்து வகைகள் கொண்டு வந்து தரப்பட்டது. அதனை வாங்கி நாம் விற்பனை செய்தோம். மற்றபடி எமக்கு எதுவும் தெரியாது என்று தனியார் மருந்தக வர்த்தகர் வாக்கு மூலம் அளித்துள்ளார். இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத பதிலாகும். குறித்த வர்த்தகர் சிறுபிள்ளை அல்லவே. இப்படியான அர்த்தமற்ற கூற்றுக்களை நம்புவதற்கு அரசாங்கமோ, நானோ தயாரில்லை.

இப்படியான மோசடிகள் நீண்டகாலமாக இடம் பெற்று வந்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படாததால் அவை கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்திருக்கின்றது. இவ்வாறான முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்கும் தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளும் போதியதாக இல்லை. அதன் காரணத்தினால் இவ்வாறான மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்றவகையிலான சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள் ளேன்.

இப்படியான செயலில் ஈடுபடுவோரு க்கு ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு உத் தேசித்திருக்கின்றேன் என்றார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *