இலங்கை யிலிருந்து வீட்டுப் பணிப் பெண்களை வேலைக்கு அமர்த்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கொள்கைகள், நிபந்தனைகள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பிப்பதென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்மானித்திருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள், இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகங்களூடாக இந்தத் தீர்மானம் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிவிக்கப்படும் என்று வேலைவாய்ப்புப் பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் எல்.கே. றுகுணுகே கூறியுள்ளார்.
இந்தக் கொள்கைகள், நிபந்தனைகளுக்கு நாடுகள் இணங்க வேண்டும். பணிப்பெண்களாகத் தொழிலுக்கு அமர்த்துவதற்கு முன் இவற்றுக்கு இணங்கியிருக்க வேண்டும். அதேசமயம், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அதிகாரிகள் பணிப்பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் றுகுணுகே கூறியுள்ளார்.
தொழிலுக்கு அமர்த்துவோரால் வீட்டுப் பணிப்பெண்கள் சித்திரவதை, கொடுமைக்கு இலக்காகும் போது அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சர்வதேச அமைப்புகள் உதவ வேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
Kusumpu
இது எப்போ செய்யப்பட்டிருக்க வேண்டியது.