வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகளை வழங்கும் பொருட்டு ((CHILDREN TRUST FUND) சிறுவர் நம்பிக்கை நிதியம் ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர் மானித்துள்ளது.
இந்த நிதியத்தை ஸ்தாபிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிறுவர் மேம்பாட்டு மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இந்த நிதியத்திற்கு முதற் கட்ட மாக (SAVE THE CHILDREN) சேவ் த சில்ரன் அமைப்பு 100 மில் லியன் ரூபா நிதியை வழங்கியு ள்ளதாக தெரிவித்த அவர், வெகு விரைவில் இது ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிதியத்திற்காக பல்வேறு அமைப்புகளிடமிருந்து நிதியுதவிக ளைப் பெறவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர், இதற்காக திறைசேரியும் அனுமதி வழங்கியுள் ளது என்றும் குறிப்பிட்டார்.
மாதாந்தம் 2000 ரூபாவை கொடுப் பனவாக வழங்க திட்டமிட்டுள்ளது டன் முதற்கட்டமாக 500 முன்பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளனர் என்றும் தெரிவித்தார்.