கிளி நொச்சியில் மீள்குடியமாத்தப்பட்ட மக்களுக்கு நிவாரண உணவப் பொருட்கள் வழங்குவதில் தாமதங்கள் எற்படுவதாக மீள்குடிடியற்றப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்கள் படையினராலும் கிராம அலுவலர்களாலும் பதிவுகளுக்குட்படுத்துப்பட்டு குடும்ப அட்டை. நிவாரண உணவுப் பங்கிட்டு அட்டை என்பனவும் உடனடியாக வழங்கப்படுகின்றன.
ஆனால், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் அவர்களுக்கான உலருணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் எற்படுத்தப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கடந்த 4ம் திகதி பதிவுகளுக்கு உட்படுத்தப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பலருக்கு இன்னமும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை என சம்பந்தப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை, கிளிநொச்சி அறிவியல் நகரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு கடந்த ஒரு மாதங்களுக் மேலாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள் குடியேற்றப்படும் மக்கள் எவ்விதத் தொழில் வாய்ப்புக்களுமற்ற நிலையில் நிவாரண உணவுப்பொருட்களை மட்டுமே நம்பி வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.