இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கின் மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தக பொருட்கள் மீதான வரி எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் நீக்கப்படும்.
கிலோவுக்கு 30 ரூபா வரையிலான மேற்படி வரி உள்ளூர் கிழங்கு அறுவடை சந்தைக்கு வரும் வரை மட்டுமே விதிக்கப் பட்டிருந்தது. வடக்கு, நுவரெலியா மற்றும் வெலிமடை ஆகிய அறுவடை பிரதேசங்களில் இருந்து சந்தைக்கு வரும் நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதியுடன் மேற்படி வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கேற்ப எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் இறக்குமதி உருளைக் கிழங்கு மீதான விற்பனை பண்டங்கள் வரி மீண்டும் கிலோவுக்கு 10 ரூபா வரை குறைக்கப்படும்.