கொள்வனவு செய்யும் நெல்லை களஞ்சியப்படுத்த சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான 10 களஞ்சியசாலைகளை உலக உணவு அமைப்பு இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.
கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் வேண்டுகோளின் பேரிலேயே மேற்படி களஞ்சியசாலைகள் கிடைத்துள்ளன. இத்தகைய பெறுமதிமிக்க களஞ்சிய சாலைகள் இலங்கைக்கு கிடைத்திருப்பது இது முதல் முறையாகும்.
அதிக நெல் அறுவடை கிடைக்கும் அம்பாறை, அக்கரைப்பற்று, பொலன் னறுவை ஆகிய பிரதேசங்களில் இந்த களஞ்சியசாலைகள் அமையவுள்ளன. இந்த களஞ்சியசாலைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கிலோ நெல்லை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தி வைக்க முடியும். பாகங்களாக இலங்கைக்கு கொண்டு வரப்படும் இந்த களஞ்சிய சாலைகளை தேவையான இடங்களில் அமைத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறான மேலும் சில களஞ்சியசாலைகளை தந்துதவுமாறு அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இந்தியாவிடமும் கேட்டுள்ளார். அவை கூடிய விரைவில் இங்கு வந்து சேரும்.