பிரித்தானிய தமிழ் வர்த்தகப் புள்ளியாக அறியப்பட்ட சண் என்ற சண்முககுமாரன் நவரட்ணம் அவர்களின் மகன் யூலை 23 2010ல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத் துறையில் இறுதியாண்டில் கல்விகற்கும் கண்ணன் சண்முககுமாரனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: சண் குடும்பத்தினர் தம் வியாபார நிறுவனத்திற்கு அருகில் குடியிருந்தனர். லூட்டனில் உள்ள இவர்களின் வீட்டில் தனியாக தங்கியிருந்து மகன் கண்ணன் படித்துக் கொள்வது வழமை. தற்போது சமர் ஹொலிடே என்பதால் அப்போதும் கண்ணன் தனியாக லூட்டனில் தங்கி படித்து வந்தார். சம்பவத்திற்கு முதல்நாள் இரவு யூலை 22 சண் குடும்பத்தினர் கண்ணனை வந்து பார்த்து அவருக்கான உணவுகளை எல்லாம் தயாரித்து உணவருந்தி மகிழ்ந்து இருந்ததாக சண் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.
மறுநாள் யூலை 24 அன்று லூட்டனில் உள்ள அவர்களின் வீட்டை நீண்ட காலமாகப் பராமரித்து துப்பரவு செய்யும் வெள்ளைகார வயோதிப மாது வழமைபோல் தனது கடமைகளைச் செய்யச் காலை வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கே கண்ணன் வேட்டியில் சுருக்கிட்டு மாடிப் படிக்கட்டுப் பகுதியில் தொங்கிக் கொண்டு இருந்தார். அதனைப் பார்த்துப் பயந்துபோன வயோதிப மாது அவசரசேவைக்கு உடனடியாக அழைப்பு விடுத்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும் மருத்துவப் பிரிவினரும் கண்ணனின் உடலை மருத்துவ வண்டியில் எடுத்துச் சென்றனர். பொலிஸார் கண்ணனின் லப்ரொப்பையும் மோபைல் போனையும் தடயப் பொருட்களாகக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் மதியம் ஒரு மனியளவில் ஃபமிலி லெய்சன் ஒபிசர்ஸ் சண் குடும்பத்திற்கு இந்த அதிர்ச்சியான துக்ககராமான செய்தியைத் தெரியப்படுத்தினர். அவர்கள் லூட்டன் வந்த போது கண்ணனின் உடல் ஏற்கனவே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இருந்தது.
தங்கள் மகனின் மிகச் சடுதியான உயிரிழப்பை ஏற்றக்கொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாத வேதனையுடள் குடும்பத்தினர் தவிப்பதை சண்னின் நண்பர் லண்டன் குரலுக்கு விபரித்தார்.
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான தற்கொலைகள் வழமையாகி வருகின்றது. பாதிக்கப்பட்ட குடும்பங்களால் இதனைப் புரிந்துகொள்ள இயலாமல் உள்ளதுடன் குடும்பத்தை நிலைகுலையச் செய்கின்றது. தற்கொலை பற்றிய விழிப்புணர்வு தமிழ் சமூகத்திற்கு மிக அவசியமாகின்றது.
முகாமைத்துவ இறுதியாண்டு மாணவனான கண்ணன் ரக்பீ விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர். தனது உடலை திடகாத்திரமாகவும் பலமாகவும் வைத்திருப்பதில் நாட்டம் உடையவர். அவரைத் தன்னையே அழிக்கும்படி தூண்டிய மனநிலைக்கு என்ன காரணம் என்பதை குடும்பத்தினராலும் நண்பர்கள் உறவுகளாலும் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
2008ல் அகிலன் கோபாலகிருஸ்ணன் தனது மருத்துவ காரணங்களால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். தங்கள் மகனின் இழப்புப் போன்று மற்றவர்களுக்கு ஏற்படுவதைத் தவிர்க்க தொலைபேசி ஆலோசனைச் சேவையை கோபாலகிருஸ்ணன் தம்பதிகள் அகிலன் நினைவாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சண் குடும்பத்தினர் மிகுந்த கடவுள் நம்பிக்கையும் கடவுள் பக்தியும் உடையவர்கள். நல்லூரில் 10ம் திருவிழாவைச் செய்து வந்த இவர்கள் ஆச்சுவே முருகன் ஆலயத்தில் 10வது திருவிழாவைச் சிறப்பாகச் செய்து வந்தனர். கண்ணனும் மிகுந்த கடவுள் பக்தி உடையவர். இறுதியில் அந்த வேட்டியிலேயே தன்னுயிரையும் முடித்துக் கொண்டார்.
இவருடைய ஓகஸ்ட் 1 2010ல் இறுதிக் கிரியைகள் ஹென்டனில் இடம்பெற்றது.
பல்லி
புலம்பெயர் தமிழர் பணதில் காட்டும் அக்கறையில் சிறிது குழந்தைகளின் வளர்ப்பிலும் காட்டவேண்டும்; இதுமட்டுமல்ல இன்று புலம்பெயர் தேசத்தில் 50 மேற்பட்ட குறூப்புகள் இயங்குவதாக வரும் செய்திகள் கவலைக்கு இடமானதே; இப்படியான குழுக்களில் பல சிறுவர்கள் தமது காதல், பயமுறுத்தலுக்காக சேர்கின்றனர்; இதுவரை இப்படியான தேவையற்ற செயலால் இறந்தவர்கள் எண்ணிக்கை பல; தயவுசெய்து வாரம் ஒருதடவையேனும் உங்கள் குழந்தகளுடன் நேரத்தை செலவிடுங்கள். இல்லையேல் இப்படியான இழப்புகள் தொடரவே செய்யும்;
சண் குடும்பத்தினருக்கு பல்லி குடும்ப கண்ணீர் துளிகள்;
தமிழ்வாதம்
அறியப்பட்ட தமிழ் வர்த்தகப் புள்ளி,
முகாமைத்துவத்தில் இறுதியாண்டு,
ரக்பி விளையாட்டு வீரன்,
முதல் நாள் குடும்ப விருந்து.
தற்கொலையா??
கொன்ஸ்ரன்ரைன்
//அறியப்பட்ட தமிழ் வர்த்தகப் புள்ளி
முகாமைத்துவத்தில் இறுதியாண்டு
ரக்பி விளையாட்டு வீரன்
முதல் நாள் குடும்ப விருந்து.
தற்கொலையா??//
சரியான சிந்தனை!!!
இதுவொரு ஏகாதிபத்திய சதி
தமிழ்வாதம்
தற்கொலை என யார் தீர்மானத்திற்கு வந்தவர்கள்? லண்டனில் என்ன மகிந்த ஆட்சியா நடக்கிறது?