தமிழ் போராட்டங்கள் – ஜி20 போராட்டங்கள் போன்றவை தடை செய்யப்படலாம்!!!

Steve_O_Connellலண்டனில் இடம்பெற்ற தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் ஜி20 போன்ற பெரும்  போராட்டங்களை மெற்றோ பொலிட்டன் பொலிஸார் தடைசெய்யவதற்கான தெரிவு அவர்களுக்கு இருப்பதாக அமைச்சரவை உறுப்பினர் ஸ்ரீவ் ஓ கொன்னல் தெரிவித்துள்ளார். இவர் மெற்றோ பொலிட்டன் பொலிஸ் ஆணையகத்தின் குரொய்டன் – சட்டம் பகுதிப் பிரதிநிதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் இக்கருத்தை யூலை 22ல் இடம்பெற்ற இக்குழுவின் சந்திப்பில் வெளிப்படுத்தி இருந்தார்.

பிரித்தானியாவில் ஆட்சியில் உள்ள கொன்சவேடிவ் – லிபிரல் டெமொகிரட் கூட்டாட்சி மெற் பொலிஸ் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு 25 வீதத்தால் குறைத்துள்ளது. அதனால் மெற் பொலிஸ் தனது சேவைகளை மட்டுப்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளது. அதனால் 7.5 மில்லியன் பவுண் செலவை ஏற்படுத்திய தமிழ் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்; ஜி20 போராட்டங்கள் என்பனவற்றை எதிர்காலத்தில் அனுமதிக்க முடியுமா என்ற ஐயம் எழுப்பப்பட்டு உள்ளது.

‘தற்போதுள்ள நெருக்கடியான  சூழலில் வாழ்பவர்களை எது முக்கியம் எனக் கேட்டால் அவர்கள் இளைஞர்களின் வன்முறை, கடத்தல், பாதுகாப்பு என்பனவே முக்கியமானது எனப் பதிலளிப்பார்கள். போராட்டங்களைக் கவனிப்பது முக்கிய பொறுப்பாக இருக்க முடியுமா?’ என்று ஸ்ரீவ் ஓ கொன்னல் கேள்வி எழுப்பி உள்ளார்.

‘நான் ஒட்டுமொத்தமாக அனைத்து போராட்டங்களையும் தடை செய்யும் நிலைப்பாட்டைக் கொள்ளவில்லை. பிரித்தானியாவில் போராட்டங்களுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு.  பெரும்பாலான போராட்டங்கள் அனுமதிக்கப்படும். ஆனால் தமிழ் மக்களின் ஜீ20 போன்ற பெரிய அளவிலான போராட்டங்களே இதனால் பாதிக்கப்படும்’ என்றும் ஸ்ரீவ் ஓ கொன்னல் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மெற் பொலிஸ் கொமிஸ்னர் சேர் போல் ஸ்ரீபன்சன் ‘பிரித்தானியாவுக்கு கருத்துச் சுதந்திரம் தொடர்பில் ஒரு பாரம்பரியம் உண்டு. லண்டனில் இடம்பெறும் போராட்டங்கள் அதில் முக்கியமானவை. இது லண்டன் நகருக்கும் பெருமை சேர்க்கின்ற விடயம்’ எனத் தெரிவித்து இருந்தார்.

சேர் போல் ஸ்ரீபன்சன் மேலும் தெரிவிக்கையில் ‘எதிர்காலத்தில் போராட்டங்களை ஏற்பாடு செய்பவர்களே அவற்றைக் கண்காணிப்பதற்கான தொண்டர்களை ஏற்பாடு செய்வதன் மூலம் பொலீஸ்க்கு ஏற்படும் செலவைத் தவிர்க்க முடியும்’ என்றார்.

ஸ்ரீவ் ஓ கொன்னலின் கருத்தை எதிர்த்த மெற் பொலிஸ் ஆணையகத்தின் தொழிற்கட்சி உறுப்பினர் வாஸ் சோகுரோஸ் ‘ஸ்ரீவ் ஓ கொன்னல்  எமது போராடும் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை கீழ்ப்படுத்தவும் பொலீஸ் வரவுசெலவுத் திட்டத்தை மேலும் 25 வீதத்தால் குறைக்கவும் சொல்கின்றாரா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

லண்டனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் மக்டோனால்ட் சாப்பிட்டார் என சண் டெய்லி மெயில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதற்கு எதிராக பரமேஸ்வரன் தொடுத்த வழக்கில் நீதிமன்ற விசாரணைகள் இல்லாமலேயே இரு தரப்பினரும் உடன்பாட்டுக்கு வந்து யூலை 29ல் இரு பத்திரிகைகளும் தங்களது செய்தி தவறானது எனத் தெரிவித்தனர். இரு பத்திரிககைளும் இணைந்து 77500 நட்டஈடு வழங்கவும் உடன்பட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • BC
    BC

    புலி தலைமையை காப்பாற்ற போராட்டங்களை நீங்கள் முதலே தடை செய்திருந்தால் சுயமாக முடிவு எடுக்க தெரியாத தமிழ் மக்கள் பலருக்கு பெரிய உதவியாக இருந்திருக்கும். இப்போ அந்த கள்ளன் கேட்டதுக்காக போனேன், அதில் இருந்து தான் எனக்கு நோய் வந்தது, இருந்து தான் எனக்கு வேலை போய்விட்டது என்று திட்டுகிறார்கள்.
    அழிவு குழுவை காப்பாற்ற நடந்த போராட்டத்துக்கு மில்லியன்கள் பவுண் செலவு. தேவையா இது?

    Reply
  • மாயா
    மாயா

    இங்கே அழுவோருக்கு வேலை மட்டும்தான் போனது. அங்கே அவர்களது வாழ்கையே போய் விட்டது. எல்லாம் இந்த புலத்து புலிப் புண்ணாக்குகளால்தான். அவனுக்குத்தான் புத்தியில்லை, உனக்கு எங்கே போனது புத்தி? ( இப்படித்தான் முன்னைய பெரியோர்கள் கேட்பார்கள். அவர்களையும் புலிகள் போட்டுத் தள்ளியது.) நம் ஈழ மாகான்கள் புத்திசாலிகளை போட்டுத் தள்ளி விட்டு தனி நாடு பெற முயன்று, சரியான வழி காட்டல் இல்லாமல் நிற்கிறது. இதுதான் இன்றைய நிலை?

    Reply
  • Abdul
    Abdul

    தொடர்ந்தும் புலிஎதிர்ப்புராணம் பாடுவதினால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. அடுத்த நகர்வைப் பற்றி யோசிப்பதுதான் அங்கு நொந்து போயிருக்கும் அப்பாவி சனங்களுக்கு ஏதாவது நன்மையைத் தேடித்தர உதவும். உலக மாற்றங்களுக்கு ஏற்ப எமது அனுகு முறைகளும் உபாயங்களும் மாறவேண்டுமென்பதை மேலே உள்ள செய்தி மீண்டுமொரு தடவை வலியுறுத்துகின்றது.

    Reply
  • பல்லி
    பல்லி

    //தொடர்ந்தும் புலிஎதிர்ப்புராணம் பாடுவதினால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. // அப்துல்

    ஜயோ ஜயோ பாரதி சொல்படி;;

    புலியின் சொத்துக்கள் அனைத்தும்:
    கடைகள்; வீடுகள்; பத்திரிகைகள். கோவில்கள். உணவகங்கள்; கப்பல்கள். அங்காடிகள்; திரைபட தயாரிப்புக்கள்; போக்குவரத்து; பாடசாலை: இது தொடரும்;; அத்தனையும் அவரவருக்கே சொந்தம் சொந்தம் சொந்தமாக்கி விட்டார்கள்?

    Reply
  • மாயா
    மாயா

    இனிப் புலிப் புராணம் பாடாதீர்கள் என்போரும், தலைவர் இருக்கிறார் என்போரும் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள். வெளிநாடுகளிலும் , இலங்கையிலும் உள்ள புலிகளது தற்போதைய சொத்துகள் இருப்பவர்களுக்கே உடமையாகி விட்ட நிலையில் , அதை மறந்து அல்லது அதை கதைக்காமல் அடுத்த சுரண்டலுக்கு போக வேண்டிய மாற்று வழிகளை சிந்திக்கச் சொல்லி அப்துல் சொல்கிறாரா?

    முதலில் உள்ளதை வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கச் செய்து அவர்களை தலை நிமிர வையுங்கள்…………..
    அதன் பிறகு முடிந்தால்,……அடுத்த அவர்களுக்கு மீண்டும் ஆயுதம் கொடுத்து அழிவுக்கு நகர்த்த முயலுங்கள்?

    Reply
  • மாயா
    மாயா

    வெளிநாட்டு போராட்டங்களை தவிடு பொடியாக்கும் கந்தன் அருள்? அதாவது மக்கள் சுதந்திரமாக பல வருடங்களுக்குப் பின் குழுமிய தருணம்? இவை வெளிநாட்டு ஆயுதக் கும்பல்களுக்கு வேலாயுதம்தான்?
    நல்லுரில் மக்கள் திரண்ட காட்சி:
    http://www.lankadeepa.lk/2010/09/07/images/kowil_1.jpg

    Reply
  • BC
    BC

    அப்துல், அங்கே அப்பாவி சனங்கள் நொந்து போய் இந்த நிலைக்கு வர காரணமான புலிகள் புலம்பெயர்ந்த நாட்டில் சுருட்டிய பணத்தில் அந்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. பதிலுக்கு மேலே பல்லி சொன்னவற்றில் தங்களுக்கு சொந்தமாக முதலீடு செய்துவிட்டார்கள். அந்த பத்திரிக்கைகள் புலி நாசகார புராணம் பாடுகின்றன.
    சிலர் நான் புலியல்ல என்று கூறி கருத்தெழுதுவது தெரியும். இந்த முயற்ச்சி புதுசு.

    Reply
  • BC
    BC

    மாயா, நல்லுரில் மக்கள் திரண்ட காட்சி பார்த்தேன். பல வருடங்களுக்குப் பின் புலி இல்லாததினால் மக்கள் சுதந்திரமாக திரண்ட காட்சி கண்கொள்ளா காட்சி. அதில் புலம்பெயர் நாடுகளிலும் இருந்தும் வந்திருந்த அடியவர்கள் பலர். அதிலும் புலிப் கொடி பிடித்தோமே என்று வருந்தும் நம்மவர்கள் பலர்.

    Reply