இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் நாட்டிலுள்ள அரசாங்க தமிழ், சிங்கள பாடசாலைகள் யாவும் நாளை 07 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் முஸ்லிம் பாடசாலைகள் இம்மாதம் 13 ஆம் திகதியே ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன அறிவித்துள்ளார்.
இதேவேளை க.பொ.த. (உ/த) பரீட்சை விடைத்தாள் திருத்தும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் இம்மாதம் 13 ஆம் திகதியே திறக்கப்படும்.
விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடவுள்ள பிரதான பரீட்சகர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்வாதம்
மகிந்தா மாத்தையா! எப்ப உங்கள் ஒரே ஜாதி ஒரே கொடி(அம்பாந்தோட்டையில் கூறியது) நடைமுறைக்கு வரும்?