இரண்டாம் தவணை விடுமுறையின் பின் தமிழ், சிங்கள பாடசாலைகள் இன்று (07) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. க.பொ.த. (உ/த) பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையின் மூன்றாம் கட்டம் இடம்பெறும் பாடசாலைகளும் இன்று மீண்டும் திறக்கப்படும் எனினும் க. பொ. த. (உ/த) பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையின் முதல் கட்டமும் 5 ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கை இடம்பெறும் பாடசாலைகள் எதிர்வரும் 13 ஆம் திகதியும் க. பொ. த. (உ/த) பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையின் 2 ஆம் கட்டம் இடம்பெறும் பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படும்.
அதேவேளை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பிக்க ப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
க.பொ.த. (உ/த) பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையின் முதல் கட்டம் இடம்பெற்ற பாடசாலைகள் வருமாறு: கொழும்பு றோயல் கல்லூரி, ஆனந்தாக் கல்லூரி மற்றும் டி. எஸ். சேனநாயக்க கல்லூரி, கம்பஹா பண்டாரநாயக்க மகா வித்தியாலயம், களுத்துறை மகா வித்தியாலயம், கண்டி கிங்ஸ்வுட் வித்தியாலயம், பெண்கள் உயர் பாடசாலை, காலி வித்தியாலோக வித்தியாலயம்.