இலங் கையில் கடந்த 8 மாதங்களில் டெங்குக் காய்ச்சலினால் 208 பேர் பலியாகியுள்ளனர்; 28 ஆயிரத்து 955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
கொழும்பில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 52 பேர் பலியாகியுள்ளதோடு 4965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் டெங்கு நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.