லண்டனில் குறிப்பாக கிழக்கு லண்டனில் கடைகளுக்கு போன் காட்டுகளை விநியோகிக்கும் மொத்த விநியோக முகவர் கடைகளுக்கு போன் காட்டுகளை விற்றுவிட்டு தனது நிறுவனத்தை சட்டப்படி வங்குரோத்தாக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.
நியூஹாம் கவுன்சிலின் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த இம்முகவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போன் காட் மொத்த விநியோகத்தில் ஈடுபட்டு வருபவர். ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரீற் நோத்தில் கடையும் வைத்துள்ள இவர் அனுபவமற்ற தனது உறவுக்காரர் ஒருவரின் பெயரில் நிறுவனம் ஒன்றைப் பதிவு செய்து அதனூடாகவே வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதனால் சட்டப்படி இச்செயல்களுக்கு அவர் பொறுப்புடையவர் அல்ல.
நீண்ட காலம் இவர் போன் காட் மொத்த விநியோகத்தில் இருந்தமையால் இவருக்கு பெரும் தொகைக் கடன்களை போன் காட் நிறுவனங்கள் வழங்கி இருந்தன. ஆனால் இவர் சில்லறை வியாபாரிகளுக்கு முற்பணம் பெற்றுக் கொண்டே போன் காட்டுகளை விநியோகித்து இருந்தார். ஆனால் போன் காட் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.
தங்களுக்கு வரவேண்டிய கொள்முதல் பணம் வராததால் போன்காட் நிறுவனங்கள் இம்முகவருக்கு வழங்கிய போன் காட்களை பயன்படுத்த முடியாதவாறு செய்தனர். இதனால் ஏற்கனவே முற்பணம் செலுத்தி போன் காட்களைப் பெற்றுக்கொண்ட பல நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் பல நூற்றுக் கணக்காண ஆயிரக் கணக்கான பவுண்களை இழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் தங்கள் வியாபாரத்தில் மிகுந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சில்லறை வியாபாரிகள் நூற்றுக் கணக்கான ஆயிரக் கணக்கான பவுண்களை இந்த போன் காட் மோசடியில் இழந்துள்ளமையால் மிகவும் நொந்து போயுள்ளனர்.
‘பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தது போலாகியது இந்த போன் காட் விடயம்’ என்கிறார் ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரீறில் போன் காட் விற்கும் ஒரு நடுத்தர வயதானவர். ‘இப்பொழுது போன் காட் வியாபாரத்தில் போட்டி அதிகம். நாங்கள் ஒரு நாள் முழுக்க இதில் நின்றாலும் நாளாந்த வாழ்க்கைச் செலவுக்கே உழைப்பது காணாது. ஆனால் இப்ப எனக்கு ஒரு மாத உழைப்பே பறிபோய்விட்டது’ என்று விரக்தியுடன் தெரிவித்தார் அவர்.
தமிழ்வாதம்
முள்ளிவாய்க்கலிற்குப் பிறகும், அரசாங்கத்தோடை எல்லாரும் துள்ளிக் கொண்டு திரியினம். உதென்ன பெரிய பிரச்சனை. அடுத்த ஏமாத்து வியாபாரத்தில முதலப் போடுங்கோ. எல்லாம் சரியா வரும்.