தமிழ் திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளா நாயகனாக நடித்துவந்த முரளி(46) இன்று சென்னையில் நெஞ்சுலியால் மரணமடைந்தார். முரளியின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
1984ம் ஆண்டு பூவிலங்கு வெளியானபோது அதில் நாயகனாக அனல் பறக்க வசனம் பேசி நடித்த முரளி, தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். 1984ல் தொடங்கிய முரளியின் நடிப்பு பயணம் 2002ம் ஆண்டு வரை நிற்காமல் படு பிசியாக போய்க் கொண்டிருந்தது.
பூவிலங்கைத் தொடர்ந்து பகல் நிலவு படத்தில் மணிரத்தினத்தின் கையால் குட்டுப்பட்டு பண்பட்ட நடிப்பைக் காட்டினார் முரளி. ஆக்ரோஷமாகவும் நடிக்க முடியும், பக்குவப்பட்ட நடிப்பையும் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார் இப்படத்தின் மூலம். தொடர்ந்து பல படங்களில் நடித்த முரளிக்கு பெரும் ஏற்றத்தையும், அவரை ஒரு ஸ்டார் நடிகராகவும் உயர்த்திய படம் விக்ரமனின் புது வசந்தம். அவரது திரையுலக வாழ்க்கையில் அது ஒரு முக்கிய மைல் கல். அதைத் தொடர்ந்து மிகவும் பிசியான நடிகராக உயர்ந்தார் முரளி.
சேரன் இயக்கத்தில் முரளி நடித்த பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு ஆகிய இரு படங்களும் முரளியின் நடிப்புத்திறமையை மேலும் பளிச்சிட வைத்த அருமையான படங்கள். சுந்தரா டிராவல்ஸில் இவரும், வடிவேலுவும் செய்த காமெடிக் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலங்க வைத்ததை மறக்க முடியாது.
ஆனந்தம் படமும் முரளியின் அருமையான நடிப்பை வெளிக் கொண்டு வந்த படங்களில் ஒன்று.. தமிழ் சினிமாவின் ஆர்ப்பாட்டமில்லாத, அதேசமயம் ஏராளமான வெள்ளி விழா படங்களைக் கொடுத்த மிகச் சிறிய நடிகர்களில் முரளியும் குறிப்பிடத்தக்கவர். எந்த நிலையிலும் அவர் தலைக்கணம் பிடித்து நடந்ததில்லை. பந்தா செய்ததில்லை. தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் மதித்து நடந்தவர்.
2001ம் ஆண்டு பாரதிராஜாவின் கடல் பூக்கள் படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றார் முரளி. கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கடைசியாக முரளி நடித்த படம் அவரது மகனின் முதல் படமான பாணா காத்தாடிதான். அதற்கு முன்பு அவர் நடித்த படமான கவசம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில் அகால மரணத்தை சந்தித்துள்ளார் முரளி. முரளியின் மனைவி ஷோபா. இந்தத் தம்பதிக்கு மகன் அதர்வா தவிர காவ்யா என்ற மகள் உள்ளார்.
மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் முரளி பேசிய வார்த்தை இது… நான் 30 வருடங்களா நடித்த காலத்தில் எத்தனையோ தவறுகளை செய்துள்ளேன். ஆனால் அதை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பொறுத்துக் கொண்டு என்னை வாழ வைத்தனர்.எனவே தயாரிப்பாளர்களுக்கு மதிப்பு கொடு, நல்ல பெயரெடு, நல்ல நடிகராக உருவாகு, பணத்தை விட நல்ல படம் முக்கியம் என்பதையே எனது மகனுக்கு அறிவுரையாக கூறியுள்ளேன் என்றார் முரளி.
ajeevan
இனிய நண்பன் முரளியின் மறைவு கேட்டு கலங்குகிறேன். உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். உன் பிரிவால் துயருறும் உன் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆடம்பரமற்ற உன் அன்பான நட்பு என்றும் என் மனதை விட்டு அகலாது. உன்னிடம் நான் பார்த்தது மென்மையை மட்டுமல்ல, தன்னடக்கத்தையும்தான். உன் ஏழ்மையான நடைமுறை கண்டு அன்றும் வியந்தேன். இன்றும் வியக்கிறேன். மனிதன் தவறிழைக்கலாம். வாழ்வு முழுவதும் இளமையாக இருந்ததற்கு உன் ஏழ்மையான நடைமுறைதான் காரணம். மறக்க முடியாத பாசம். விழிகள் நனைகின்றன நண்பனே……….
http://www.youtube.com/watch?v=zgxNb9_JvOQ&feature=player_embedded
http://www.youtube.com/watch?v=2pdq868vll8&feature=player_embedded
palli
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். உன் பிரிவால் துயருறும் உன் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
நல்ல ஒரு கிராமத்து நடிகன்(சினிமாவில்), நல்ல மனிதனாகவே (வாழ்வில்) மரணித்து விட்டார்; விளம்பரம் இல்லாத விளம்பர நடிகன் முரளி;
பார்த்திபன்
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். உன் பிரிவால் துயருறும் உன் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
BC
நடிகர் முரளியின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
meerabharathy
கடந்த 50 ஆண்டுகளில் மனித வாழ்க்கையில் திரைப்படங்களினதும் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளினதும் பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. நமது நடை உடை பாவனை அழங்காரம் அனைத்தையும் சிறுவயதிலிருந்து தீர்மானிப்பவையாக இவை இருக்கின்றன….
அம்மா வகிடு எடுத்து எண்ணை வைத்து சீவி விடும் தலைமயிரை குழப்பி கமலைப் போல மேவி இழுப்பதற்காக மேலே போகதா தலைமரை படுத்தும்பாடு இருக்கின்றதே… இப்படி ஒவ்வொன்றான கூறி செல்லலாம்….
முரளியின் புதல் படம் பூவிலங்கு 83 ம் ஆண்டு யாழில் குருநகர் அகதிகள் முகாமிலிருந்தபோது பல தடவைகள் பார்த்த படம்…
அன்று படம்தான் நேரத்தைக் கடத்தும் முக்கியமான பொழுது போக்காக இருந்தது….
ஏனோ அன்றிலிருந்து முரளி மனதில் பதிந்தவிட்ட ஒரு நடிகர்….
ஒரு கேள்வி ஒன்று என் ஆழ்மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றது…
இத் திரைப்படங்கள் தொலைக் காட்சி நாடங்கள்….எல்லாம்.. மனிதருக்கு இருக்கும் சமூக அரசியல் மற்றும் சுய பிரக்ஞையை இல்லாது செய்கின்றனவா? எனனில் எமது அதிகமான நேரங்கள் இதனுடனையே கழிகின்றன……
Actor Murali in Coffee with Anu
http://www.youtube.com/watch?v=M6q6zAodW-
Actor Murali Kadhai Alla Nijam – 02-09-2010
http://www.youtube.com/watch?v=zgxNb9_JvOQ
Tamil Actor Murali in his last TV Appearance Athu Ithu Ethu
http://www.youtube.com/watch?v=3eMwA1ZILnA
karuthu
இத் திரைப்படங்கள் தொலைக் காட்சி நாடங்கள்….எல்லாம்.. மனிதருக்கு இருக்கும் சமூக அரசியல் மற்றும் சுய பிரக்ஞையை இல்லாது செய்கின்றனவா? எனனில் எமது அதிகமான நேரங்கள் இதனுடனையே கழிகின்றன……
உண்மை தான். அரசியல் வாதிகளினதும் வியாபாரிகளினதும் நோக்கம் அதுவே.
முரளி ஒரு வகையில் மாறுபட்டுள்ளார். இவரது நிறம் வர்த்தக நடிகர்களுக்குரிய நிறமல்ல. இதனாலேயே பல தடவைகள் இவருடன் பல நடிகைகள் நடிக்க மறுத்துள்ளனர்.இவரது தந்தை தெலுங்கில் ஒரு பிரபல இயக்குனர். இவரை தமிழ்த்திரையுலகம் ஏற்றுக் கொண்டது ஆச்சரியமே. பந்தா அற்ற இயல்பான நடிகர்.
nantha
பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் சித்தலிங்கையாவின் மகன் முரளி எந்த “பந்தாவும்” இல்லாமல் நடிப்பைத் தன் தொழிலாகப் பார்த்துவிட்டு மறைந்துள்ளார்.
இந்திய திரைப்படங்களில் “நிறம்” ஒரு தகுதி. தமிழ் நடிகர்களான முரளி, ரஜனிகாந்த், விஜயகாந்த், பார்த்திபன் மலையாள நடிகர்களான கலாபவன் மணி, சீனிவாசன் போன்ற நடிகர்கள் அந்த தடையை தாண்டியவர்கள்.
முரளியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!
Kulan
வாழ்வு எனும் பள்ளியில் நாம் படிப்பது அனுபவம் என்று பாடத்தையே. இவ்வளவு அனுவம் பெற்ற மனிதன் முதிர்ச்சியடையும் போது அவன்மட்டும் இறக்கவில்லை. அவனுடன் அவனுடைய அனுபவப்படிப்பும் அல்லவா இறந்து விடுகிறது. இது உண்மையிலேயே கொடூரமானதே. எளிமையான பந்தாவில்லா எதைக்கொடுத்தாலும் இயற்கையாகவே நடித்துவிடும் முரளி அதுவும் கன்னடத்தைச் சேர்ந்தவர் நல்ல தமிழ்பேசி நடிக்கும் ஒரு நடிகரை இனி நாம் பார்க்க இயலாது. இது திரையுலகுக்கு மட்டுமல்ல தமிழ்சினிமா இரசிகர்களுக்கும் மாபெரும் இழப்போ. முரளியின் ஆத்மா சாந்தி பெறவும் அவரை இழந்த குடும்பத்தவர்கள் சாந்தி பெறவும் எல்லாம் வல்ல என் தெய்வம் இயற்கை என்றும் அவர்களுக்குத் துணை நிற்கும்.
மாயா
// இவரது தந்தை தெலுங்கில் ஒரு பிரபல இயக்குனர்.- karuthu //
முரளியின் தந்தை கன்னட படத் தயாரிப்பாளர்.
//karuthu on September 8, 2010 7:31 pm
இத் திரைப்படங்கள் தொலைக் காட்சி நாடங்கள்….எல்லாம்.. மனிதருக்கு இருக்கும் சமூக அரசியல் மற்றும் சுய பிரக்ஞையை இல்லாது செய்கின்றனவா? எனனில் எமது அதிகமான நேரங்கள் இதனுடனையே கழிகின்றன……//
இவரது எழிமைதான் இவரது இளமைக்கு காரணமாக இருந்தது எனலாம். கலைஞர்கள் உண்மையில் மக்களுக்குத் தேவை. இதை மாற்ற யாராலும் முடியாது. கடவுளான அந்த சிவனே மக்களை மகிழ்விக்க நடராசராக ஆடியிருக்கிறார் என்றால், அதுவே கலையின் கதை சொல்ல போதும். பரதக் கலையை தந்துள்ளார். ஆண்டாள் சரசுவதியும் இசை மீட்டுகிறார். அரசியல் மனிதனுக்கு தேவையில்லாத இடங்கள் அதிகம். கலைத் தன்மை தேவையற்ற இடங்கள் குறைவு. ஒவ்வொரு பொருளிலும் ஏதோ ஒரு அழகியல் தெரியும். அங்கே பார்வை கலையுணர்வை வெளிப்படுத்தும். மனம் சோர்ந்து போன ஒரு மனிதன் ஒரு பாடலைக் கேட்டு மன ஆறுதல் பெறுகிறான். நோயாளிகளுக்கு இசைத் தெரபியும், பயிர்களுக்கு இசை உணவும் கொடுத்து பயனடைந்துள்ளனர். பிறந்த குழந்தை உலகத்தை கண்டதும் அழுவது இசை. அந்தக் குழந்தைக்கான தாயின் தாலாட்டும் இசை. இறந்து பாடையில் போகும் போது கேட்கும் அழுகையும், ஒப்பாரியும் இசை. மனிதனையும் கலையையும் வேறுபடுத்த முடியாது.
கலரான கதாநாயகர்கள் தமிழில் குறைவாக இருந்திருக்கலாம். உலக திரைப்படங்களில் அநேகம் பார்க்கலாம்.
முரளியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.
pandithar
கருப்புத்தான் எனக்கு பிடித்த கலரு
இவர் கண்ணிரண்டும் என்னை மயக்கும்
தவுசன் நோட்டு பவரு…
அம்மா சேலையை இரண்டாக்கி
தாவணி போடும் தங்கச்சி…
இந்த பாடல் வரிகளில் முரளியின்
முகம் தெரிகிறது…..
எழிமையான அந்த நடிகருக்கு
எல்லோரும் மரியாதை செலுத்துவோம்
http://www.youtube.com/watch?v=wkmjNYEXz9g