உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை பழைய முறை உட்படுத்தப்பட்ட கலப்பு முறையில் நடத்துவதற்கான சட்டம் இயற்றுவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
உள்ளுராட்சி மன்றங்கள் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
அதன்படி மூன்றில் ஒரு வீதம் விருப்பு வாக்கு அடிப்படையிலும் மூன்றில் இரண்டு பழைய முறைப்படியும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.