யாழ்ப்பாண மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்தவர்கள் புலம்பெயர் தமிழர்களே என்று பிரித்தானியாவின் நியூஹாம் மாநகர உதவி மேயர் போல் சத்தியநேசன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் இருந்து நாடு சென்றுள்ள இவர் சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்துள்ளார். இவருக்கு யாழ்.மாநகரசபை 09.09.10 மகத்தான வரவேற்பு வழங்கி விழா எடுத்தது. யாழ்.மாநகரசபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு கூறினார்.
இவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: ”யாழ்ப்பாணத்தில் செத்த மக்களின் எண்ணிக்கையை வைத்தே வெளிநாடுகளில் தமிழர்கள் விசா பெற்றுக் கொள்கின்றனர். யாழ்ப்பாண மக்களை நடுவீதிக்கு கொண்டு வந்து விட்டவர்கள் புலம் பெயர் சமூகத்தினர்தான்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள் என ஐரோப்பிய நாடுகளில் சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் சீனப் பெண்களை வைத்து விபச்சாரம் நடக்கிறது என்றும் சிங்களப் பெண்கள் விபச்சாரம் செய்கின்றார்கள் என்றும் தமிழ்ப் பெண்களை இராணுவம் கற்பழிக்கின்றது என்றும் ஐரோப்பிய நாடுகளில் சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ”
யாழில் நவமங்கை இல்லத்தின் திறப்பு விழா நிகழ்விலும் கலந்துகொண்ட கவுன்சிலர் போல் சத்தியநேசன் தான் கற்ற பள்ளியான சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி இருந்தார். இலங்கையில் தமிழ் அரசியல் தலைமைகள் சிலரையும் தனது பயணத்தின் போது சந்தித்துள்ளார்.
தமிழ்வாதம்
நீங்கள் எந்தத் தமிழர்?
புலம் பெயராத தமிழரோ?
சேர்ந்து செய்து போட்டு, முதலே ஓடிப் போய்க் காட்டிக் கொடுக்கிறது என்பது இதுதானோ?
T Constantine
Politics: The conduct of public affairs for private advantage
கருணா
//நீங்கள் எந்தத் தமிழர்?
புலம் பெயராத தமிழரோ?
சேர்ந்து செய்து போட்டு, முதலே ஓடிப் போய்க் காட்டிக் கொடுக்கிறது என்பது இதுதானோ?//
ஹி ஹி அவர் சொன்னது உங்களை எங்களை இல்லை ஹிஹி தமிழ் வாதம்
சாந்தன்
இவர் சொல்வதுபோலவே பல இங்கிலாந்து மக்கள்/அரசியல்வாதிகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் என்ன யாழ்ப்பானத்துக்குப் பதிலாக இங்கிலாந்து/லண்டன் என இடம் மாறி இருக்கும்.
இந்த வெளிநாட்டுக்காரரால் லண்டன் மக்கள் வேலைவாய்ப்பை மேயர் பதவியை (ஈஸ்ற்ஹாம்) இழந்து நடுத்தெருவுக்கு வந்து விட்டார்கள் எனச் சொல்வதனை ஆமோதித்தாலும் ஆமோதிப்பார், அரசியல்வாதி அல்லவா?
aras
மேஜரின் அரசியல் அறிவு இவ்வளவுதானா? புல்லரிக்கிறது!! அடுத்த தடவை தேர்தலுக்கு வரும் போது (இந்தப் பேச்சை மக்கள் அறிந்திருந்தால்) நல்ல விளைச்சல் கிடைக்கும். (ஏதோ காரண காரியங்களுடன் சொல்லியிருந்தால் கூட பரவாயில்லாமல் போயிருக்கும்.) சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது பகிடியாகவா கொலை விளையாட்டு நடத்தியிருக்கறது?
Kumar
”யாழ்ப்பாணத்தில் செத்த மக்களின் எண்ணிக்கையை வைத்தே வெளிநாடுகளில் தமிழர்கள் விசா பெற்றுக் கொள்கின்றனர். யாழ்ப்பாண மக்களை நடுவீதிக்கு கொண்டு வந்து விட்டவர்கள் புலம் பெயர் சமூகத்தினர்தான். போல் சத்தியநேசன்
தவளையும் தன்வாயால் கெடும் என்பார்கள். போல் சத்தியநேசன் போன்ற அரசியல்வாதிகள் அடுத்த எலெக்ஷன் கெட்கப் போகும்போது- வீட்டுக்குவீடு லண்டனில் இதைச் சொல்வாரா? யாழ்ப்பாணத்தமிழரை நடுவீதிக்கு கொண்ட வந்துவிட்டவர்கள் புலம்பெயர் தமிழர் என்று கூறும் சத்தியநேசனுக்கு புலம்பெயர்ந்தோரின் பொருளாதாரப் பங்களிப்பால் தான் ஊரில் பல குடும்பங்களில் அடுப்பெரிந்தது – போராட்ட காலத்திலும்> பொருளாதாரத் தடைகளின்போதும்- என்ற உண்மை கசந்து விட்டதுவோ?
APPU
well said, Kumar.
One of the reasons of our downfall is due to opportunistic people and opportunistic media reporting. Above is an example of both.
BC
குமார், புலிகளின் மோசமான அழிவு போராட்டகாலங்களிலும் கூட புலம்பெயர்ந்த உறவினரின் பொருளாதாரப் பங்களிப்பால் தான் ஊரில் பல குடும்பங்களுக்கு உதவியாக இருந்தது.
யாழ்ப்பாணத்தில் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள் என ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் பிரச்சாரம் செய்து வருவதையும் யாழ்ப்பாணத்தில் சீனப் பெண்களை வைத்து விபச்சாரம் நடக்கிறது என்றும் சிங்களப் பெண்கள் விபச்சாரம் செய்கின்றார்கள் என்றும் தமிழ்ப் பெண்களை இராணுவம் கற்பழிக்கின்றது என்று புலி ஆதரவாளகளினால் பிரச்சாரம் செய்யபடுவதையும் உங்களால் மறுக்க முடியுமா?
மக்கள் அழிவை வைத்தே பிழைப்பு நடத்திய புலிகள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
aras
மேஐர் இப்படிச் சொல்லுகிறாரே ஒரு பிரச்சனையும் இல்லாமலா அவர் புளொட் இயக்கத்தில் வேலை செய்தார்?
Ajith
Dear Publisher of this news, I have a question to you. Can you tell us the source of this information and whether this news was published in any news papers in Sri Lanka? What was his purpose of his visit? Who invited him? Has he participated in any other meetings? Has he visited the refugee camps?
This sort of information will help us to find out whether this news item is reliable or just to create a bad image of the deputy major. If his statements are reliable the the deputy major has to explain the following:
”யாழ்ப்பாணத்தில் செத்த மக்களின் எண்ணிக்கையை வைத்தே வெளிநாடுகளில் தமிழர்கள் விசா பெற்றுக் கொள்கின்றனர். யாழ்ப்பாண மக்களை நடுவீதிக்கு கொண்டு வந்து விட்டவர்கள் புலம் பெயர் சமூகத்தினர்தான்.
By his statement he accuses the tamil community lied to get visa in foregin countris. Being a British deputy major, he has a duty to provide necessary facts to the immigration department about those who lied to get visa. I am not sure whether the major came to this nation as a refugee or on any other visa. There was no war in Jaffna after 1995. Why he is saying this now and why didn’t he say this in UK?
chandran.raja
ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் எழுதுகிறாரே கட்டுவன் ஐயர். ஒரு பத்து வருடங்கள் முன்கூட்டி எழுதியிருந்தால் கூட பல்லாயிரம் உயிர்களையும் அவலங்களையும் தவிர்த்திருக்க முடியும். காலங்கடந்த ஞானம் வந்து என்ன சுகம்?.
போல் சத்தியநேசனையும் இப்படித்தான் நினைக்க தோன்றுகிறது…இருந்தாலும்ஆரோக்கியமான கருத்துக்கள் வரும் போது ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே…வரவேற்ப்போம்.
BC
இதே போல் தயா மாஸ்ரருக்கு வந்த காலம் கடந்த ஞானம். பிபிசிக்கு கூறுகிறார். “நாட்டில் எவரும் யுத்தத்தை விரும்பவில்லை. கடந்த 30 வருட கால யுத்தத்தால் மனித உயிர்கள் அழிந்தன. பெருந்தொகையான பணம் விரயமானது. தமிழர்களின் பிரதான இலட்சியம் கல்வி”.
mani
Labour party in uk having discussions about the injustices done by srilankan goverment and calling for a international enquiry. A long standing member of labour party and the deputy mayor of newham is showing his aliance to his previous gang. The labour party does not take action against him. I am resigning as a labour party member. We should stop this hipocracy. For this comments he should resign from the post and appolige to newham tamils most of them are refugees who voted for him.
Gobu
Dear Paul, please note the following
The service and help you have done in the past to the individuals including Tamils are appreciated.Especially you stood firm and taken action to stop the Tamil youths violence was excellent.
We are strongly object for your half baked comments made in Jaffna as a gratitude for the 100 garlands received from a government minister who is wanted by tamilnadu government for past criminal activities. First of all just think about your comments.
Why cant we say that you were given visa in may 1985 in respect of the innocent tamils who died in 1983 riots. we very well understand you are indebted to the singalease thug who killed the innocent tamils in 1983. Otherwise councillor Mr. Paul Sathianesan would be in srilanka enjoying camp life. We gathered you had a grand welcome in Jaffna. We wonder why? you are not elected by tamil votes, as you know if you were a Conservative candidate in last election you would not had more than 50 votes. You were Quoted as Deputy Mayor, but you are not and you were Waring deputy civic ambassadors costume.We all know that post has been abolished in Newham council.We Can compare your act as Prince Charles is Waring King Henry V111 costumes in Jaffna.Don’t ever think Jaffna people are stupids.
As far We know you and your family was not affected by the war.In the mean time you were also not affected by standardisation.As you know this discriminatory act had a baby called Manavar peravai.Then we had so many riots.Eventually the freedom struggle has started.In a foot ball match if the team wins we don’t analyse anything but if the team loose we blame the manager,team selection ,substitution,performance of the players etc.Currently we all are doing this.
Now we come to the actual point several time some of the tamils who are against Ltte are behaving like that there are against the tamils. Think, lot of tamils are always collaborating with singalease.Did you find a single singalease with tamil parties.(even one half singalease left TNA) .So please think before you talk.When you were in india you must have felt the actual freedom of the people.
They had problem in Punjab and have problems in Kasmir are they booming innocent people? In tamil they say you can wake up the man who is actually sleeping. but not the guy who is pretending so. Please do not pretend and do something. So please correct your self and do things for your own good and the society.
சாந்தன்
//…தமிழர்களின் பிரதான இலட்சியம் கல்வி”….///
ஆம் …தயாமாஸ்ரரும் ஒருவகையில் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். அந்த பிரதான இலட்சியத்துக்கு ‘தரப்படுத்தல்’ எனும் ஆப்பு வைக்கப்போய்த் தான் இவ்வளவும் நடந்தது என ஒரு சாரார் சொல்வதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!
இன்னொரு சாரார் கல்வி என்கின்ற இலட்சியம் பற்றியும் தரப்படுத்தலைப் பற்றியும் பேசினால் ‘யாழ் மையவாத சைவ வேளாள’ என எழுத ஆரம்பித்து விடுவார்கள்.