வட மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சும் அதன் கீழ் இயங்கும் சகல திணைக்களங்களும் அடுத்த மாத நடுப்பகுதியில் கிளிநொச்சி நகருக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன. வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் சுகாதார மேம்பாட்டு திட்டங்களை உரிய முறையில் உடனுக்குடன் நடைமுறை ப்படுத்தும் நோக்குடனே இந்த அமைச் சையும் கிளிநொச்சி நகருக்கு மாற்ற தீர்மானித்ததாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திர சிறி தெரிவித்தார்.
இதேவேளை, வட மாகாண கல்வி, கலாசார அலுவல்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சும் அதன் கீழுள்ள சகல திணைக்களங்களும் நவம்பர் மாத இறுதியில் கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்ட பின்னரும் கூட வட மாகாண சபையின் சகல அமைச்சுக்களும் அதன் கீழுள்ள சகல திணைக்களங்களும் திருகோணமலை, வரோதயர் நகரிலேயே இயங்கி வருகின்றன.