வடமராட்சிக் கிழக்கில் முதற்கட்டமாக 356 குடும்பங்களைச் சோந்த 1092; பேர் மீள் குடியமர்த்தப்பட்டு உள்ள நிலையில் மேலும் 3500 குடும்பங்களைச் சேர்ந்த 92 ஆயிரம் பேர் விரைவில் மீள் குடியமர்த்தப்பட உள்ளதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
நலன்பரி நிலையங்களிலும் நண்பர்கள் உறவினர் வீடுகளிலும் தங்கியிருக்கும் மக்களே இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கம் மக்கள் மீள்குடியமாத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.