படிப்பினை கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியங்களை மேற்கொள்ள சர்வதேச மன்னிப்புச்சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தாம் எவ்வித முடிவினையும் மேற்கொள்ளவில்லை என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கபட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதா இல்லையா என்பது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்பச்சபையின் ஊடக அதிகாரி தோமஸ் யோகோம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாணைக்குழுவின் விசாரணைகளில் கலந்து கொள்ளுமாறு கோரும் அழைப்பு எதுவும் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபைக்கும், மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.