ஐக்கிய தேசியக் கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயேற்சைக் குழுவாக இன்னும் சில தினங்களில் இயங்கத் தொடங்குவர் எனவும், இது தொடர்பான முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஐ.தே.க. உட்பூசல் உக்கிரம்: 25 அதிருப்தி எம்.பிகளுடன் மேலும் பலர் இணைவு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தனியாக இயங்கப்போவதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும், எதிர்வரும் டிசெம்பர் மாதம் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும் போது கட்சியின் இளம் தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பால் தாங்கள் திருப்தியடையவில்லை என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சி மறுசீரமைப்புக் குழு ஒரு மாதத்துக்கு முன்னரே சிபார்சுகளை கையளித்து விட்டது எனவும் அவர் தெரிவித்தார். கட்சியின் தேசிய மாநாடு யூலை மாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒகஸ்ட் மாதத்திற்கு பின்போடப்பட்டது. இப்பொது டிசெம்பர் மாதத்தில் நடைபெறும் என ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பட்டுள்ளார். தாங்கள் நாடாளுமன்றில் தனித்து இயங்கவிருப்பதை யாராலும் தடுக்க முடியாது எனவம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Abdul
இவரின் பலவீனமான தலைமைத்துவமே மஹிந்த சகோதரர்களின் எதேச்சாதிகாரத்துக்கு வழி சமைத்துக் கொடுக்கின்றது.