பல் கலைக்கழக மானிய ஆணைக்குழு உப தலைவரும் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக உடற்கூற்றுத் துறை சிரேஷ்ட பேராசிரியருமான எம். ரீ. எம். ஜிப்ரி (62) நேற்று கொழும்பில் காலமானார். சிலகாலம் நோய் வாய்ப்பட்டிருந்த இவர் நேற்று காலை மரணமானார்.
அன்னாரின் ஜனாஸா இலக்கம் 23 பிரிவேனை வீதி, இரத்மலானையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்தது. ஜனாஸா நல்லடக்கம் தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நேற்று மாலை இடம்பெற்றது. முஸ்லிம் கல்வி மாநாட்டு அமைப்பின் உறுப்பினராகவும் பணிபுரிந்த இவர் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.
arthanaarieswaran
பேராசிரியர் ஜிவ்ரி அவர்கள் ஒரு பெரும் கல்விமான். அத்தோடு தமிழ் உணர்வாளரும் கூட. யாழ் பல்கலைக்கழகத்தின் இயக்கம் தொடர்பாகவும் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் அதி கூடிய முயற்சிகளை மேற்கொண்டவர்.யாழ் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் வெளி மாவட்ட மாணவர்கள் அங்கிருந்து வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாற்றல் பெற்றுச் செல்வதைத் தடுப்பதற்கான முயற்சிகளின் மூலம் அப்பல்கலைக்கழகம் சுமுகமாக இயங்குவதற்கு நிறையவே பங்களிப்புச் செய்துள்ளார். அவரது முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. அவ்வாறான ஒருத்தரின் மறைவு குறித்து போதுமான அனுதாபச் செய்திகள் இன்மையானது நிகழ்கால சூழலில் நாம் எந்தளவுக்கு மானிடம் மரத்துப் போன மக்களாய் வாழ்கின்றோம் என்பதற்கு போதுமான சாட்சியாகவுள்ளது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக.