கிளிநொச்சி செல்வநகரில் தம் முயற்சியில் வாழ்வதற்கு உதவிக்கரம் கொடுத்தது : நேசக்கரம்

Selvanagar_Nesakkaram_14Sep10கிளி நொச்சி செல்வாநகர் குடியிருப்பில் வாழ்கின்ற 10 குடும்பங்களுக்கான உதவிகள் 14.09.10 அன்று வழங்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தங்களாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட மேற்படி குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புக்கான உதவிகளும் பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளும் வழங்கப்பட்டது.

Selvanagar_Nesakkaram_14Sep10இக்குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் அங்கவீனர்களாகவும் போரில் பிள்ளைகளை கணவர்களை இழந்தவர்களாகவும் மற்றும் தடுப்பு முகாமிலிருந்து வெளிவந்தவர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் தங்கள் உடல்களில் சன்னங்கள் எறிகணைத்துண்டுகளையும் சுமந்து கொண்டிருக்கும் இவர்களை நம்பிக்கை கொடுத்துப் புதுப்பிக்கும் உதவியாக இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

Selvanagar_Nesakkaram_14Sep10கூரைகள் அற்ற வீடுகளில் தறப்பாள்களோடு வாழ்கின்ற இம்மக்கள் தங்களுக்கான தொழில் வாய்ப்பினைக் கோரியிருந்த போது அவர்களது தரவுகளை அவர்களது நிலமைகளைக் கேட்டு இந்தத் தொழில் வாய்ப்புக்கான உதவிகளை வழங்கிய யேர்மனி டோட்மூண்டிலிருந்து பவானி , யேர்மனி ஸ்ருட்காட்டிலிருந்து மனோகாந்தன், டென்மார்க்கிலிருந்து திரு.திருமதி குணரட்ணம் யோகமலர் மற்றும் டென்மார்க்கிலிருந்து சுஜாதா சண்முகநாதன் அவர்களும் முன்வந்து உதவிகளை வழங்கியிருந்தனர்.

இலங்கை ரூபா ஒருலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தையல் மெசின்கள், தச்சுத் தொழிலுக்கான உபகரணங்கள், சிறுமளிகைக்கடை, சைக்கிள் திருத்தும் கடை, கோழிவளர்ப்பு மற்றும் ஆடுவளர்ப்பு போன்றவற்றுக்கான ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • த ஜெயபாலன்.
    த ஜெயபாலன்.

    நேசக்கரம் நண்பர்களுக்கு வணக்கம்

    உங்கள் மின் அஞ்சல் செய்திக்கும் நீங்கள் மேற்கொள்ளும் மனிதாபிமானப் பணிகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    உங்கள் நேசக்கரம் புளக் பார்த்தேன் ஆவணங்களையும் பதிவு செய்துள்ளீர்கள். நன்று.

    உங்களுக்கு நிதியுதவி வழங்குபவர்கள் அதன்மூலம் செய்யும் திட்டங்கள் திட்டங்களில் பலன்பெற்றவர்கள் அல்லது அத்திட்டம் மேற்கொள்ளப்பட்ட இடம் என்ற அடிப்படையில் அட்டவணையாக வெளியிட முடீயுமானால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். மேலும் புதிய புதிய பங்களிப்புகள் வரும் போது புதிய புதிய திட்டங்களை மேற்கொள்ளும் போது முன்னைய விடயங்களையும் பார்வையிட வசதியாக இருக்கும்.

    மேலும் உங்கள் புளக்கிலும் நேசக்கரம் பற்றிய விபரங்கள் இல்லை. அதனையும் வெளிப்படுத்துவதன் மூலம் வெளிப்படைத் தன்மையையும் பொறுப்பையும் அது ஏற்படுத்துவதாக இருக்கும்.

    மீண்டும் நன்றிகள்.

    த ஜெயபாலன்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //உதவிகளை வழங்கிய யேர்மனி டோட்மூண்டிலிருந்து பவானி , யேர்மனி ஸ்ருட்காட்டிலிருந்து மனோகாந்தன், டென்மார்க்கிலிருந்து திரு.திருமதி குணரட்ணம் யோகமலர் மற்றும் டென்மார்க்கிலிருந்து சுஜாதா சண்முகநாதன் அவர்களும் முன்வந்து உதவிகளை வழங்கியிருந்தனர்//

    உங்களை வாழ்த்தவோ பாராட்டவோ எனக்கு மனசு வரவில்லை தமிழனாய் இரு கரம் கூப்பி வணங்குகிறேன்; மேலும் இப்படியான உதவிகள் தொடர உங்கள் சேவை ஒரு முன்னோட்டமாக இருக்கட்டும்:
    வணக்கத்துடன் பல்லி;

    Reply
  • நேசக்கரம்
    நேசக்கரம்

    வணக்கம் நேசக்கரம் அமைப்பின் செயற்பாடுகள் அதன் ஆரம்பத்திலிருந்தே பதிவுகளாக்கப்பட்டு வருவதுடன் நேசக்கரம் அமைப்பின் கணக்கறிக்கையும் 3 மாதங்களிற்கொரு தடைவையும் வருடாந்தக்கணக்கறிக்கையாகவும்; உதவியோர் மற்றும் உதவி பெற்றோர் விபரங்களை உள்ளடக்கி வெளியிட்டு வருகின்றோம். அதனை நேசக்கரம் இணையத்தில் பதிவிட்டு வருகின்றோம். நேசக்கரம் nesakkaram.org இணையத்தளத்தினை யெர்மனிய மொழி ஆங்கில மொழி தமிழ்மொழி ஆகிய மொழியகளில் பதிவு செய்து வெளியிடுவதனால் நீங்கள் பரிட்சயமான மொழியில் பார்வையிடலாம் நன்றி வணக்கம் இப்படிக்கு- நேசக்கரம் நிருவாகம்.

    Reply