பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்னதாக இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வடக்கில் போரினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் தொகை தற்போது 25 ஆயிரம் மட்டுமே எனவும் இவர்கள் அனைவரும் வெடிபொருட்கள் அகற்றப்பட்டவுடன் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் எனவும் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். பருவமழைக்கு முன்பு இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னர் வடபகுதியின் அபிவிருத்திப்பணிகளை துரிதப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.