கிராம அலுவலர்கள் மக்களை அலைக்கழிக்காது அவர்களுக்கான கடமைகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். கிராம அலுவலர்களுடன் நடைபெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”கிராம அலுவலர்கள் தங்கள் கடமைகளை புறந்தள்ளாமல் மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றிற்கு பரிகாரம் காண முயற்சிக்க வேண்டும். யாழ்.குடாநாட்டில் தற்போது அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான பங்களிப்பினை கிராம அலவலர்கள் வழங்க வேண்டும. மது போதை, இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. கிராம அலுவலர்கள் குறித்து நாளொன்றிற்கு ஐம்பது முறைப்பாடுகள் வருகின்றன. சில சமயங்களில் பாராட்டியும் கடிதங்கள் வருகின்றன. பொதுச்சேவை அலுவலர்களாகவம் அரசாங்க உழியராகவும் கிராம அலுவலர்கள் இருப்பதால் கவனமாக பொறுப்புணர்வுடன் அவர்கள் செயற்பட வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.