புனர் வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் சாரதிப் பயிற்சி பெற்றவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையில் நியமனம் வழங்கவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட சுமார் நூறு விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்களுக்கு யாழ். கோண்டாவில் இலங்கைப் போக்குவரத்து டிப்போவில் சாரதிப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் உரிய சாரதி அனுமதிப்பத்திரங்களும் பெற்றிருப்பதால் இவர்களுக்கான நியமனங்களை வழங்குமாறு யாழ். டிப்போவினால் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் இவர்களுக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைப் போக்கவரத்து சபையில் வடமாகாணத்தில் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமனம் செய்யப்படவுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.