வன்னியில் பொதுமக்களின் வீடுகளை தமது தேவைக்காகப் பயன்படுத்தி வந்த படையினர் அவற்றைக் கட்டம் கட்டமாக பொது மக்களிடம் ஒப்படைத்து வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல வீடுகளிலிருந்து படையினர் வெளியேறி அவற்றை அதன் உரிமையாளர்களிடம் கையளித்து விட்டதாகவும். தொடர்ந்தும் படையினரின் வசமிருந்த விடுகள் ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
படையினர் இருந்து வரும் விட்டு உரிமையாளர்களுக்கு வாடகை வழங்கி வருவதாகவும் விடுகள் சம்பந்தப்பட்ட பிரிச்சினைகளை குறிப்பிட்ட பிராந்தியத்தின் சிவில் இணைப்பதிகாரியிடம் அல்லது, பொதுநிர்வாகப்பிரிவிடம் தொடர்பு கொண்டு பொது மக்கள் திர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.