அரசி யலமைப்புக்கான 18ஆவது திருத்தம் நேற்று (23ம் திகதி) முதல் நாட்டின் சட்டமாகியுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று சபையில் அறிவித்தார்.
பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்று பிற்பகல் கூடியது. இச்சமயம் அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போது சபாநாயகர் மேற்படி அறிவிப்பை சபையில் விடுத்தார். அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் கடந்த 08ம் திகதி சபையில் மூன்றிலிரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையுடன் நிறைவேறியது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு சபாநாயகர் கையெழுத் திட்டதும் அது நாட்டின் சட்டமாகும். அதற்கு ஏற்ப அரசியலமைப்புக்கான 18வது திருத்தமும் நேற்று முதல் நாட்டின் சட்டமாகியுள்ளது.