அரசாங்க அதிபர் அவர்கட்கு
கிளிநெச்சி
கிளிநெச்சி முத்தமிழ் விழா
அன்புடையீர்
தங்களின் அனுசரணையுடன் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து முன்று நாட்களுக்கு கிளிநெச்சியில் முத்தமிழ் விழா நடைபெறவுள்ள செய்தி கிடைத்து திகைப்படைந்தேன். இந்நிகழ்ச்சியை உங்களுடன் தொடர்பு கொண்டு இரத்து செய்யுமாறு என்னிடம் பல மக்கள் கேட்டுள்ளனர். கிளிநெச்சி பொதுமக்களில் கணிசமானவர்கள், இது மகிழ்ச்சி கொண்டாட்டங்களுக்கு உகந்த நேரம் அல்ல எனக் கூறி இவ்விழாவை இரத்துச் செய்யுமாறு கோருகின்றனர். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது விசாரணைகளை கிளிநெச்சியிலும் முல்லைத்தீவிலும் நடத்திய போது அவர்கள் முன் கூடி நின்ற பெரும் தொகை மக்கள் எனது கூற்றுக்கு சான்று பகர்வார்கள்.
மக்கள் தமது தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளைப்பற்றியும், காணாமல் போய் உள்ள உறவினர்களைப் பற்றியும் சொல்லண்ணாத் துயரில் இருக்கும் போது அவர்கள் எதுவித கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளும் மன நிலையில் இல்லை. மேலும் மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்படும் இவர்கள் சொல்லெணா கஸ்டங்களை அனுபவித்துக் கொண்டு இன்றும் இருக்கின்றனர். அவர்களின் அனேகமான வீடுகள் கூரை அற்ற நிலையிலும், மனித சஞ்சாரத்துக்கு தகுதியற்றவைகளாகவே இன்றும் இருக்கின்றன். பிள்ளைகள் உள்ள குடும்பங்கள் அதிகளவான கஸ்டங்களை அனுபவிக்கின்றனர். தொடர்ந்து முகாம்களில் உள்ள அவர்களுக்களுடைய உறவுகள் படும் கஸ்டமோ மிக மோசம்.
தயவு செய்து இந்நிகழ்ச்சியை நடத்துவதில் உங்களுக்குள்ள கஸ்டங்களை அதிகரிகளுக்கு எடுத்துக் கூறி இந் நிகழ்ச்சியை இரத்துச் செய்யவும். யாழ் மத்திய கல்லூரி அதிகரிகளுக்கும், திருமறை கலாமன்றத்தினருக்கும் எனது வேண்டுகோளை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி!
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
வீ.ஆனந்தசங்கரி
தலைவர் – தமிழர் விடுதலைக் கூட்டணி
George
சங்கரி ஐயா கிளிநொச்சியில் என்ன கூத்தும் கும்மாளமுமா செய்கிறார்கள். முத்தமிழ் விழா தானே செய்கிறார்கள். அதில் என்ன பிரச்சினை. மக்களில் ஒரு பகுதியினர் இப்பவும் முகாம்களுக்குள்ள இருக்கினம். உண்மை. நிறையக் கஸ்டங்கள் துன்பங்கள். உண்மை. அதுக்காக முத்தமிழ் விழா கொண்டாடக் கூடாதா? என்ன நியாயம்?
அந்த சனமும் இடைக்கிடை சிரிச்சு சந்தோசமா இருக்க வைக்க வேனும். அவையும் ‘மானாட மயிலாட’ பார்க்க வேணும். உதுகளுக்கெல்லாம் ஏன் ஐயா கடிதம். பழசாய்ப் போனோலே எதுக்கெடுத்தாலும் நொட்டையும் நொடிசலும்.
பேசாம இருங்கப் பழகுங்க.
மாயா
இவரையெல்லாம் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலுக்கு தள்ளிவிட வேண்டும். பென்சன் எடுங்கோ, வாழ்த்துவோம்
palli
பல நூறு கடிதம் எழுதியதற்காக ஜயாவுக்கு யாராவது ஒரு படமும் சிறு பணமுடிச்சும் கொடுத்தால் அதன்பின் ஜயா கடித சமாசாரத்தை கைவிட்டு விடுவார், சிலர் அரசியல் பேசகூடாது என இந்த 18வது திருத்த சட்டத்தை பாவித்து மகிந்தா ஒரு சட்டம் கொண்டுவந்தால் அதில் முதலில் சிக்குபவர் நம்ம கடித நாயகன் ஆனந்த சங்கரியரே,
மாயா
கூத்தமைப்பு ஒரு காலத்தில் இளைஞர் பேரவையை உருவாக்கி இளைஞர்கள் கைகளில் துப்பாக்கியை எடுக்க வைத்து முள்ளி வாய்க்காலுக்கு வழி காட்டியது. நாட்டின் இளம் குருத்துகளை வழி காட்டி முடிந்து, தற்போது புலம் பெயர் நாடுகளில் வாழும் இளம் தளிர்களை உசுப்பேத்தி இன்னொரு வாய்க்காலுக்கு வழி காட்ட களம் இறங்கியுள்னளார்கள். இதோ சிறீதரன் சுவிசில் காட்டும் வழி? இவர்கள் வாழ்வதற்கு இந்த பிஞ்சுகள் என்ன செய்தனவோ? இவரும் ஒரு கல்லூரி அதிபரா? இவராலும் எத்தனை சின்னஞ் சிறுசுகள் சாவைத் தழுவியிருக்கும்?. கேளுங்கள் இவர் பேச்சை, புலிகளின் அழிவுக்கு வித்திட்டு விட்டு புலிகள் பேரால் கையேந்தும் முகத்தை பாருங்கள்
http://www.youtube.com/watch?v=qKConvId1Oo&feature=player_embedded