உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதம மந்திரி

tgte.jpgநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரதமமந்திரி தெரிவுசெய்யப்பட்டதுடன் அமைச்சரவையினை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என இணையத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் 2010 செப்ரம்பர் 29ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 1ம் நாள்வரையான மூன்றுதினங்கள் கூடி அவ்அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் தமக்கான பிரதம மந்திரியினையும் தெரிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சரவையினை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தன.

நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்றம் இரண்டு அவைகளினைக் கொண்டதாக இருக்கும். இது தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினைக் கொண்ட பாராளுமன்றத்தினையும், செனற் எனப்படும் நியமன அங்கத்தவர்களினைக் கொண்ட ஆலோசனைச் சபையினையும் கொண்டிருக்கும். நாடுகடந்த தமிழீழ அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கனடாவினைச் சேர்ந்த திரு.பொன் பால்ராஜன் அவர்களினை பாராளுமன்ற சபாநாயகராகவும் சுவிற்சலாந்து நாட்டினைச் சேர்ந்த செல்வி. சுகன்யா புத்திரசிகாமணி அவர்களை பிரதி சபாநாயகராகவும் ஏகமனதாக தெரிவு செய்தது.

 திரு.விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதம மந்திரியாக பாராளுமன்றத்தினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

tgte.jpg

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 Comments

  • BC
    BC

    இலங்கை தமிழர்களை அவமதிக்கும் இந்த செய்திக்கு தேசம்நெற்றில் தணிக்கை கிடையாதா?

    Reply
  • நந்தா
    நந்தா

    இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு ஒரு உபத்திரவம் தீர்ந்து விட்டது. ஆனால் வெளினாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்குக் கஷ்ட காலம் தீரவில்லை! உண்டியல்களோடு வந்து கதவைத் தட்ட “புதியதொரு” புல்லங்குழலோடு பழைய திருடர்கள் புறப்பட்டிருக்கிறார்கள்.

    Reply
  • VP
    VP

    அட புண்ணாக்கு பிரத மந்திரியே இவர்! விசர் தலைக்கேறி முத்தி இவர்கள் வெகுவிரைவிலை தலையை பிய்த்தாலும் ஆச்சரியப்பட முடியாது! கோட்டும் சூட்டும் போட்டு தமிழனின் மிஞ்சிய கோவணத்தை உருவ தயாராகும் இவர்கள் மத்தியில் ஒரு பம்பாய் பட்டு வேட்டியுடன் நிற்கிறார். இவர்கள் எதற்காக அங்கு இப்படி நிற்கிறோம் என்று தெரியாவிட்டலும் நிற்க வேணும் என்பதற்காக நிற்கிறார்கள் போலும்! ஆனையிறவு அடி எயாப்போட் அடி அநுராதபுர அடி என்று அடித்து துவைத்தவர்கள் வெகுவிரைவில் அடிக்கப்போகிறார்கள் என்று புலியாதரவாளர்கள் சொன்னது இதையே! ஜெயபாலனும் பத்திரிகா தர்மம் மாறாது இந்த விசர் கூத்தை ஒரு செய்தியாக இங்கை போட்டிருக்கிறார்! இதை வாசிச்ச இலங்கை ஜனாதிபதி முதல் பாராளுமன்ற பியோன் வரை எல்லாரும் தடார் என்று விழுந்திருப்பாங்கள்! அவங்களுக்கு இதுதான் இந்த வரியத்தின் மிகப்பெரிய யோக்!

    Reply
  • thurai
    thurai

    இந்தவேலையை முள்ளிவாய்க்கால் அழிவிற்கு முன்பே செய்துவிட்டு பேசாமால் இருந்திருக்கலாம். இலங்கையில் இப்போது சிங்களவர்களிற்கு அடுத்ததாக சனத்தொகையில் முஸ்லிம்கழும், இந்தியத்தோட்டத் தொழிலாளருமே இரண்டாவது இடத்தைப் பிடிக்கவுள்ளனர். எனவே உலக தமிழீழ அகதிகள் சங்கத்தின் தலைவர் என்பதே பொருத்தமான பெயராக இருக்குமென எண்ணுகின்றேன்.– துரை

    Reply
  • raajan
    raajan

    தயவு செய்து யாராவது எனது கேள்விக்கு பதில்தரவும்( புரியாதபடியால் தான் கேக்கிறேன்)
    1,நாடு கடந்த த.ஈழம் பிரகடனப்படுத்துவதால் த.ஈழம் கிடக்குமா?
    2,அப்படியாயின் இதனை ஏன் முதலில் செய்யவில்லை?
    3,வரலாற்றில் உலகில் வேறெதாவது ஒரு ஒடுக்கப்பட்ட இனம் இதேபோல் பிரகடனப்படுத்தி வெற்றி அடைந்திருக்கிறார்களா?
    4, இப்படி பிரகடனபடுத்துவது எந்த விததிலாவது இலங்கை அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்குமா?
    5,ஐ.நா வில் இவர்கள் அங்கம் வகிப்பார்களா?
    நன்றி

    Reply
  • பல்லி
    பல்லி

    //அட புண்ணாக்கு பிரத மந்திரியே//
    ஜனாதிபதியாக கிலிண்டனை தெரிவு செய்யலாம்;
    வெளியுறவு அமைச்சராய் கே பி
    நிதி புண்ணாக்காய் றெசியை கேட்டு பார்க்கலாம்
    பாதுகாப்பு கொடியவனாய் நெடியவனையும்
    கலாசார குத்துவிளக்காய் காசியரையும் போடலாம்;
    ஊடகதுறைக்கு சின்னபொடி
    விளையாட்டு துறைக்கு சுக்கிளா
    இப்படியே எதிர்கட்சி தலைவராய் மகிந்தாவையும் தெரிவு செய்யுங்கோ;
    மறதியில் எதிர்கட்சி தலைவராய் ஓபாமாவை சொல்லிட போறாங்க உங்க குழைந்தைங்க;

    Reply
  • கந்தையா
    கந்தையா

    உருத்திரகுமாரை வெறும் பிரதம மந்திரியாக்கிப் போட்டாங்கள். அவரை ஜனாதிபதியாக்காததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.பிரதமருக்க புண்ணாக்கெண்டா ஜனாதிபதிக்கு என்ன தவிடோ…

    Reply
  • மாயா
    மாயா

    // நந்தா on October 2, 2010 3:10 pm
    இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு ஒரு உபத்திரவம் தீர்ந்து விட்டது. ஆனால் வெளினாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்குக் கஷ்ட காலம் தீரவில்லை! உண்டியல்களோடு வந்து கதவைத் தட்ட “புதியதொரு” புல்லங்குழலோடு பழைய திருடர்கள் புறப்பட்டிருக்கிறார்கள்.//

    உண்டியலுக்கு இவர்கள் வரும் போது தமிழீழ வங்கி வைப்பில போட்ட பணத்து பற்றுச் சீட்டிருந்தால் கொடுத்து , தேவையானதை எடுத்துக் கொள்ளச் சொல்லலாம். அதிகமாக வைப்பில போட்டிருந்தால் , மீதியை தந்துட்டு போகச் சொல்லாம். இந்தப் புதையலுக்கே , முள்ளிவாய்க்காலில அத்தனை பேர் புதையுண்டது.

    புலிகளின் தாகம் , புலத்தில் தமிழீழம்.

    Reply
  • chandran .raja
    chandran .raja

    ராஜன் உங்கள் கேள்விகள் நியாமானதே!. இது இலங்கை அரசியலுக்கோ தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. இது சொத்து-வாரிசுகளைப் பற்றியது. பொட்டம்மான் சுபாதமிழ் செல்வன் அதை தொடர்ந்து வந்த நெடிமாறன் கே.பி உருத்திரகுமார் போன்றவர்களின் அசையும் அசையா சொத்துகள் பற்றிய பிரச்சனை. அரசியலுக்கும் தமிழ்மக்களுக்கும் எந்த சம்பந்தமில்லாதது. தற்போதைக்கு இது தான் பதில்.

    Reply
  • thurai
    thurai

    தமிழர் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டபோது சொந்தமாக ஓர் காரியாலயம் கூட இருந்ததில்லை. புலிகள் போராடும்போது வன்னியில் கோட்டையும் கட்டவில்லை. உருத்திரகுமார் பிரதம மந்திரியாகும்போது சொந்த மண்கூட இல்லை.– துரை

    Reply
  • பல்லி
    பல்லி

    அட பாவிகளா இப்படியுமா இருப்பாங்க,
    புலம் பெயர் தேசத்தில் சு பா நாவுக்கு சிலைகட்ட நிதி கேக்கிறார்களாம்; இதை எங்கு போய் ஒப்பாரி வைக்க;

    Reply
  • para
    para

    நீங்கள் என்னவும் பகிடி பண்ணுங்கோ கிண்டல் பண்ணுங்கோ. ஒண்டும் ஆகப்போறதில்லை. நெடியவனை ஜனாதிபதியாக்கி பிரச்சினைக்குரியாககள் கொஞ்சப்பேருக்கு மந்திரிப்பதவியும் கொடுத்து யாவாரம் இன்னம் ஆமொகமாக ஓடத்தான் போகுது. ஒரு நிம்மதி அங்க சனத்தின்ர அழிவு இல்லாமல் இது நடக்குது. நடக்கட்டும். நாமேன் பொறாமைப்படுவான்!

    Reply
  • LUCKY
    LUCKY

    நேற்று முன்தினம் புலிகளின் நாடுகடந்த தமிழீழ அரசின் அமர்வு அமெரிக்காவில் இடம்பெற்றது. இதன்போது நாடுகடந்த அரசின் பிரதமராக புலிகளின் சட்ட ஆலோசகர் வி.உருத்திரகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நோர்வே மற்றும் ஜரோப்பிய நாடுகளில் இருந்து வந்த நெடியவன், கே.பி. குழுவினர் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள உருத்திரகுமார் குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பிற்கு சென்றபோதும் அங்கு ஒன்றுகூடியவர்களால் சமாதானப்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

    நெடியவன் குழுவினர் கடும்போக்குடையவர்களாக காணப்பட்டதாகவும் இதனால் அதிர்ச்சியடைந்த உருத்திரகுமார் குழுவினர் நேற்றையதினம் கனடா கந்தசாமி கோயிலில் ஒன்றுகூடி நெடியவன், கே.பி. குழுவினரின் செயற்பாடுகள் குறித்து விவாதித்துள்ளதாகவும் உள்ளிருந்து கிடைக்கும் உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.- நன்றிneruppu.com

    Reply
  • karuna
    karuna

    சதி முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது

    நாடுகடந்த அரசின் இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு இன்று பாரிஸ் லண்டன் நியுயோர்க் ஆகிய நகரங்களில் வீடியோ கொன்பிரன்ஸ் இணைப்பின் உதவியோடு நடைபெறற்றது.

    இந்த அமர்வில் நாடுகடந்த அரசை முடக்குவதற்கும் அதன்பிரதமராக வருவரின் அதிகாரங்களை குறைத்து அவரை செயலாற்ற முடியாத ஒரு பொம்மை பிரதமராக வைத்திருப்பதற்கும் ஒப்பரேசன் இறக்கை வெட்டல் என்ற பெயரில் திரைமறைவில் சில சக்திகள் மேற்கொண்ட சதி முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது

    இன்றைய நிகழ்வுகளில் பாரிசில் கலந்து கொண்ட சில உறுப்பினர்களை வெளியில் இருந்து சிலர் வழிநடத்தியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
    நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை இல்லாத இடங்களுக்கு 20 பிரநிதிகளை நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நியமனத்தை மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    ஆனால் அந்த உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக் கூடாது சிலர் வாதிட்டனர்.
    ஒருவர் தெரிவின் மூலமோ அல்லது நியமனத்தின் மூலமோ நடாளுமன்ற உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவருக்கு வாக்களிக்கும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் உண்டு இதுவே உலகெங்கும் உள்ள ஜனநாயக நடைமுறை என்று பலரால் எடுத்துக் கூறப்பட்டது. இதை பாரிசில் இருந்து கலந்தகொண்டவர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டனர்.ஆனால் நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று சிலர் விடாப் பிடியாக நின்றதால் இந்த விடயம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.பாரிசில் முதலில் வாக்குரிமை வழங்கலாம் என்று ஒப்புக்கொண்ட ஒரு பகுதினர் வாக்கெடுப்பு என்று வந்தபோது வெளியில் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பை அடுத்து அவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று வாக்களித்தது அவர்கள் வெளியில் இருந்து சிலரால் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியது.
    அதுமட்டுமல்லாமல் உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தம் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த நியமனத்தை தமிழீழ மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆராய்ந்து உறுதிப்படுத்தவார்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பும் அவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று இவர்கள் வாதிட்டதும் அதில் விடாப்பிடியாக நின்றதும் 1949 ல் மலையக மக்களுக்கு வாக்குரிமை தேவையில்லை என்று வாக்களித்த மேலதிக்க மனோபாவம் விமானம் ஏறிவந்து புலத்தில் கட்டிக்காப்பாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

    பொதுவாக அரசியல் அமைப்பு சட்டம் என்பது ஒரு நாட்டின் அதி உயர்ந்த சட்டமாகும்.இந்தச் சட்டத்தை தனி நபர்;களோ குழுக்களோ தங்களது சுயலாபத்துக்காக தவறாகப் பயன்படுத்தவிடக் கூடாது என்பதற்காக இந்தச் சட்டத்தை மாற்றுவது திருத்துவது இல்லாமல் செய்வது எதுவாக இருந்தாலும் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் தேவை என்ற ஒரு விதி அனைத்து ஜனநாயக நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.இது அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான ஒரு அடிப்படை விதி என்று கூடச் சொல்லலாம்.
    ஆனால் இந்த விதியை மாற்றி பெரும்பான்மை பலம் அதாவது 51 க்கு 49 என்ற அடிப்படையில் இருக்குமாறு அமைக்க வேண்டும் என்று மேற்குறிப்பிட்ட பகுதியினர் வாதிட்டனர். இதன் நோக்கம் இந்த அரசையும் பாராளுமன்றத்தையும் பலம்மிக்க அமைப்பாக உருவெடுக்க விடாமல் தடுத்து வெளியில் இருந்து இயக்கப்படும் பொம்மை அரசாக தொங்கு பாராளுமன்றமாக வைத்திருக்கவேண்டும் என்பதேயாகும்.ஆளமாக சிந்தித்துப் பார்த்தால்; மேற்குலகம் விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலில் இட்டு தடை செய்ததற்கான புறநிலைகளை உருவாக்கி கொடுத்ததைப் போல இந்த அரசையும் சர்வதேச பயங்கரவாத பொறிமுறைக்குள் சிக்க வைப்பதற்கான ஒரு சதிவலை பின்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

    இந்த முயற்சியும் பெரும்பான்மை பிரதிநிதிகளால் முறியடிக்கப்பட்ட போது பாரிசில் இருந்து கலந்தகொண்டு ஒரு பிரதிநிதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அந்த அழைப்பை செவிமடுத்த அவர் அமெரிக்காவில் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட நேர்வே பிரதிநிதியான முரளி என்பவரை கத்தில் குத்திவிட்டார்கள் என்ற தகவலை அவர் அவைக்கு அறிவித்தார்.ஆனால் அவ்வாறு அறிவித்த ஒரிரு நிமிடங்கள் அது பொய் என்பது ஆதாரபுர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. குத்தியால் குத்தப்பட்டதாக சொல்லப்பட்ட உறுப்பினர் உணவுண்டு கொண்டிருந்த காட்சி நேரடியாக காணொழியில் காண்பிக்கப்பட்டது.
    முக்கியமான விவாதம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் இவ்வாறான ஒரு பொய் செய்தியை அவைக்கு தெரிவித்தன் மூலம் அவை நடவடிக்கைகளை திசை திருப்புவதற்கு அல்லது குழப்புவதற்கு சில சக்திகள் முயன்றிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிந்தது.
    இது நடந்த இன்னும் சிறிது நேரத்தில் அமெரிக்காவில் கனேடிய பிரதிநிதி ஒருவர் தன்னை இருவர் தாக்கிவிட்டார்கள் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது அதனால் தான் அவையை விட்டு வெளிநடப்புச் செய்கிறேன் என்று கூறி ஒருவர் சென்று விட்டார்.
    ஊண்மையில் அவ்வாறான ஒரு தாக்குதல் நடந்திருந்தால் அது கண்டிக்கததக்கது.
    ஆனால் 32ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களும் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ஆபத்து இருக்கிறது என்று செல்லிக் கொண்டு களமுனைக்கு செல்லாமல் இருந்திருந்தால் இன்றைக்கு உயிருடன் இருந்திருப்பார்கள் அல்லவா என்பதை அந்த உறுப்பினர் ஒரு கணம் மனதில் நினைத்துப் பார்த்திருந்தால் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்யும் முடிவை தவிர்த்திருப்பார்.
    இந்தச் சம்பவம் நடந்தவுடன் மீண்டும் பாரிசுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அதுவும் நோர்வே பிரதிநிதியை கத்தியால் குத்திவிட்டார்கள் என்ற தகவலை தெரிவித்த அதே பிரதிநிதிக்குத் தான் இந்த அழைப்பு வந்தது.
    அதை அடுத்து விடுதலைப்புலிகள் எங்களை இந்த அவையைவிட்டு வெளிநடப்புச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.நாங்கள் வெளிநடப்புச் செய்கிறோம் என்று கூறிவிட்டு அந்த உறுப்பினர் தனக்கு இசைவான சிலருடன் வெளியேறிவிட்டார்.

    உறுப்பினார் தங்களுக்கு பிடிக்காத ஒரு விடயத்துக்கு அல்லது தீர்மானத்துக்கு எதிராக வெளிநடப்புச் செய்வது ஜனநாயக உரிமை.ஆனால் விடுதலைப் புலிகள் எங்களை வெளியேறச் சொல்லி இருக்கின்றார்கள் என்று கூறிவிட்டு வெளியேறியது ஆபத்தானதும் சந்தேகத்துக்குரியதுமாகும்.

    உண்மையில் இந்த அவையில் இருந்த சிலரை வெளியில் இருந்து வழிநடத்திய சக்திகள் விடுதலைப்புலிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் ஜனநாயக நடைமுறையை சீர்குலைக்க முனைகிறார்கள் என்ற செய்தியை யாருக்கோ தெரிவிக்க முற்படுகின்றன என்பது தெரிகிறது.//

    இது எனக்கு ஈமெயிலில் அனுப்பப்பட்டது. இதை வாசித்ததும் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை! வடிவேலு பாணியில் என்னடா இது ரொம்ப சின்னப்பிள்ளைதனமா இல்லை!

    Reply
  • karuna
    karuna

    நியூயோர்க் oct2 : நா.க.அரசின் இரண்டாவது கூட்டத்தில், திருந்தாத கஸ்ரோ கூட்டமும் – பிறைமினிஸ்ரர் உருத்திரா ஆதரவு அணியும் – மோதிக் கொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதல் சம்பவம் குறித்து, க.ம.கூட்டம் கொடுத்த புகாரை,சபாநாயகர் பொன்.பாலராஜன் ஏற்க மறுத்து விட்டாராம்.

    வெட்கமேயில்லாத மக்கு பிரதிநிதிகள்: நா.க. அரசின் கூட்டம் மூன்று நாட்கள் நடந்தது. அவுஸ்ரேலிய‌ தலைவர் பேரா.செல்வநாதன் தலைமை வகித்தார். நடந்த கூட்டத்தின் போது, கனடா உலக தமிழர் கமல் ஆதரவு பிரதிநிதி முரசொலி திருச்செல்வம் , தனக்கு சபாநாயகர் பதவி தரும்படி கேட்கும் வகையில் கையில் லாந்தர் விளக்கு, மின்விசிறி, குழாய் மாலை அணிந்து வந்தார். அப்போது, பேசிய பிறைமினிஸ்ரர் ஆதரவு. பிரதிநிதி ராம் சிவலிங்கம் ஆவேசமடைந்து, லாந்தர் விளக்கை தூக்கி போட்டு உடைத்தார். இதனால், ஆத்திரமடைந்த கஸ்ரோ அணி பிரதிநிதி ஈசன் குலசேகரம் , பிறைமினிஸ்ரர் அணி., உறுப்பினரை தாக்க முயன்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பிறைமினிஸ்ரர் உருத்திராவின் படத்தை போஸ்டர் அடித்த, எதிர்க்கட்சி கஸ்ரோ மக்குகள் , கறுப்பு மூலம் மின்னஞ்சலில் உலகம் முழுதும் அனுப்பினர். நேற்று நடந்த கூட்டத்தில், அந்த போஸ்டரை காட்டி நோர்வே பிரதிநிதி முரளி பேசுகையில், “”உருத்திராவின் சர்வாதிகாரம்’ என்ற தலைப்பில் தமிழ் நெற்றில் தாமே எழுதியதாகவும் கூறினார்.

    மக்குகளின் நாற்காலி.சண்டை

    மக்குகளின் உண்மையான உருவம்:

    கஸ்ரோ அணியை சேர்ந்த முரளி , “”கடந்த கூட்டத்துக்கு நான் வரவில்லை. ஆனால், அந்த கூட்டத்தில் கஸ்ரோ அணி., வெளிநடப்பு செய்த நிலையிலும், எங்கள் சம்மதத்துடன் தான் தீர்மானம் நிறைவேறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது; இதை கண்டிக்கிறேன்,” என்றார்.

    “”போஸ்டர் அணுப்பியதற்கு முதலில் எதிர்க்கட்சியினர்(கஸ்ரோ அணி) மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்கு பிறகு மற்ற பொருள் பற்றி பேசலாம்,” என்று, சபாநாயகர் கூறினார். இதைத் தொடர்ந்து கஸ்ரோ அணி., – உருத்திராஅணி., பிரதிநிதிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வரன் வைத்திலிங்கம் , தனக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்த ஈசன் குலசேகரம், பாலன் ரட்ணராஜா ஆகிய இருவரையும் தாக்கினார். அப்போது அவர்களது மேஜை, நாற்காலிகள் கீழே விழுந்தன. அடி பலமாக விழுந்ததால், அலறிய ஈசன், கூட்டத்தை விட்டு வெளியேறினார். ஈசனின் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. பின், தான் கொண்டு வந்த, “ஹெல்மெட்’டை தலையில் மாட்டிக் கொண்டார்.

    தமிழீழம் கேட்கும் மக்குகளின் -அருமை-பெருமை

    நா.க.அரசின் உறுப்பினர்களிடையே மோதல் முற்றியதில் மேஜை, நாற்காலிகள் பறந்தன. எந்தப்பக்கமும் சாராத சில உறுப்பினர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். மோதல் முற்றியதால், பிரதி சபாநாயகர் சுகன்யா, வெளியே பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை உள்ளே அழைத்தார். போலீஸ் உதவி கமிஷனர்கள் ராம்சி கிளார்க்,அலிபெய்டவுண் சுப்ரின்டன் இராமசாமி தலைமையில், போலீசார் உள்ளே சென்றனர். கஸ்ரோ அணி திருச்செல்வம், ஈசன் குலசேகரம் ஆகியோர், இச்சம்பவத்தை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து தாக்கப்பட்ட கஸ்ரோ அணி உறுப்பினர் ஈசன் Bethesda, Maryland மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், அங்கு அவரை அனுமதிக்க மறுத்துவிட்டனர். மேரிலான்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் தெரிவிக்கச் சென்றார். ஆனால், போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். “ஆழவிட்டதிடம் அனுமதி வாங்கி வந்தால் தான் புகாரை பெறமுடியும்’ எனக் கூறி, அவர்களை திருப்பியனுப்பினர்.

    (யாவும் உண்மை கலந்த கற்பனை)

    Reply
  • பல்லி
    பல்லி

    இவர்களது சினிமாவுக்கு முன்னால் எந்திரனாவது இந்திரனாவது, என்ன ரஜனிக்கு ஆடிபாட நாயகி பக்கத்தில் உள்ளார், ஆனால் உருத்திரகுமார் (மன்னிக்கவும்) மாண்பு மிகு பிரதமருக்கு கூடி ஆட கே பி அருகில் இல்லை அம்முட்டுதான் அவர்கள் படத்தை தியேட்டரில்
    ஓட்டுகிறார்கள்? இவர்கள் ஈழத்தை புலம்பெயர் தேசத்தில் ஓட்டுகிறாரகள்;

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    சும்மா இருந்து சுரண்டிவளர்ந்த கூட்டத்திற்கு கல்லாப்பெட்டி தடிக்க எத்தனை விதமான விளையாட்டுக்கள். இதில் சில இணையங்கள் முன்னுரிமை கொடுக்க எதுவுமே அறியாத அல்லது அறிய விரும்பாத கூட்டம் வாயைப்பிளந்து பார்க்க நோர்வே சுவிஸ்சில் இருந்துபோய் அமெரிக்காவில் பாராளுமன்றம் அமைக்கிறார்களாம். அங்கு நடந்த அடிபிடியோ சொல்லில் அடங்காது. அண்ணை உருத்திரகுமார் எல்லாத்துக்கும் சேர்த்து கொள்ளி வைத்தாகி விட்டதுதானே.

    இவ்வளவு ஈசியாய் பிரதம மந்திரியாகலாம் எனத் தெரிந்திரிந்தால் உங்கள் அப்பாகூடப் பிரதம மந்திரியாகியிருப்பார். வெளிநாட்டில் ரெண்டு வேலைசெய்து கடுமையாக உழைத்து வாழ்பவர்கள் எல்லா விடயங்களையும் தேடி அலைவதில்லை. தனக்குத் தெரிந்த, பலரும் சொல்கின்ற ரிவி, இணையங்களை பார்ப்பதுதான் வழமை. அவங்களைப்போய் திரும்ப சுரண்ட வெளிக்கிட்டிருக்கிறியள். இலங்கையில் இருக்கிற கிளவியையே போட்டுத் தள்ளுமாப்போல இவரும் உங்களைப் போட்டுத்தள்ளும் காலம் பல காலமாகாது. இதிலே சூரிய சந்திரன் போல் பிரபாகரன் வருவார்என்று நெடுமாறன் சொல்வதை ‘கருவிலே அழிந்த ஈழப்போராட்டம்’ என்று சொல்கின்ற “ம.க.இ.க” ஏன் வாய்பொத்தி நிக்குதோ தெரியவில்லை

    Reply
  • BC
    BC

    //இதிலே சூரிய சந்திரன் போல் பிரபாகரன் வருவார்என்று நெடுமாறன் சொல்வதை கருவிலே அழிந்த ஈழப்போராட்டம் என்று சொல்கின்ற ம.க.இ.க ஏன் வாய்பொத்தி நிக்குதோ தெரியவில்லை.//

    அவர்கள் வாய்பொத்தி நிற்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.மாயா இதை பற்றி சிறப்பாக சொல்லியுள்ளார்.
    //இலங்கை பிரச்சனையில , வயிறு வளர்த்த ரொம்ப பேரில் , இந்திய அரசியல்வாதிகள் அதிகம். ஊடகவியளார்களும் அதிகம். ஊடகங்களும் அதிகம். உண்மையை எழுதாம, யார் யாரோ சொன்னதையெல்லாம் எழுதி படத்துக்கு கதை பண்ணுறது மாதிரி , காசு பார்த்தீங்க. உங்க பக்கங்களை பார்க்க ஆள் தேடிக்கிட்டீங்க. வேற எதுவும் தெரியாது. நீங்க யாரும் அங்க ( ஈழத்தில) என்ன நடக்குதென்ணே புரிஞ்சுக்கல்ல. //

    Reply