சரத் பொன்சேகாவிற்கு எதிரான தீர்ப்பினைத் தாம் ஏற்றுக்கொண்டமை தனிப்பட்ட பழிவாங்கலல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தாமே நியமித்த இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை தாமே ஏற்காவிட்டால் அந்த நீதிமன்றக் கட்டமைப்பிற்கே பங்கம் ஏற்படுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சரத்பொன்சேகாவிற்கு மன்னிப்பளித்தல் சம்பந்தமாக முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அப்போது அது விடயத்தில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
பொலன்னறுவையில் பெளத்த மதத் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் (நேற்று முன்தினம்) கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இது நிதி மோசடி சம்பந்தமான குற்றமாகும். “என்னைக் கொலை செய்வதாகக் கூறிய போதும் நான் அது சம்பந்தமாக ஒரு வார்த்தையேனும் பேசவில்லை” எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் மன்னிப்பளிக்க முடியுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப முறைப்படி செயற்பட்டால் அது தொடர்பில் கவனத்திற்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இராணுவ நீதிமன்றத்தில் இத்தீர்ப்பு ஒன்றும் புதியதல்ல. இந்த நீதிமன்றத்தின் மூலம் சுமார் 8000 பேர் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
karuna
இலங்கை யுத்ததை முடித்து வைத்த ஜெனரல் சரத் பொன்சேகாவும் பொன்சேகாவுக்கு எதிராக போராடி இலங்கை சட்டத்தில் மாட்டி சிறைக்குள் அரசியல் சிறை கைதிகளாக இருக்கும் புலிகளின் தற்கொலை போராளிகளும் ஒரு சிறையில் ஒரு வாட்டில் ஒரே கூண்டில் ஒரே அறைக்குள் பூட்டபட்டுள்ளனர். விதி ஆரைத்தான் விட்டுது? இலங்கை தீவில் மனிதர்களை வேட்டையாடிய புலி மற்றும் சிங்கம் ஆகிய இரண்டு காட்டு விலங்குகளும் ஒரே கூட்டில் உண்வு உண்ணுவது உலக அதிசயம்தான். புலியும் சிங்கமும் ஒரே உணவுதான் ஒரே தண்ணிதான் ஒரே படுக்கைதான் ஓரே கிணத்திலைதான் குழிப்பு ஒரே மல சலகூடத்திலைதான் கடன் தீர்கணும். உண்மையில் உலகத்தில் மகிந்த றாஜபக்ச நோபல் பரிசு பெற வேண்டியவர்.
karuna
இங்கை புலத்திலை உள்ள புலியள் ஒபாமா மகிந்தரை சந்திக்க மாட்டார் சரத்தை விடும் மட்டும் மகிந்தரை ஒருதரும் திரும்பி பாக்கமாட்டங்கள் என்று புலுடா விட்டிச்சினம். ஒபமா தங்கட பக்கம் சிங்களவனுக்கு ஒபாமா நல்ல பாடம் படிப்பிப்hர் என்டும் கதையளந்தினம். கடைசியா இப்ப ஒபாமாவும் மகிந்தரும் நின்று போட்டோ எடுத்தவுடனை பாருங்கோ இனி என்ன கதைப்பினம் எண்டு!
http://www.dailymirror.lk/index.php/news/images/6905-sent-by-president-media.html
BC
ராஜபக்சேயுடன் இணைந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கூட யாரும் ஆர்வம் காட்டவில்லையாம்! என்று தாங்களே செய்தி வெளியிட்டு தாங்களே படித்து மகிழ்கிறார்கள் புலி ஆதரவாளர்கள். இப்படியான நிலையில் இந்த படம் அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுக்க போகிறது.
சாந்தன்
//…ராஜபக்சேயுடன் இணைந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கூட யாரும் ஆர்வம் காட்டவில்லையாம்…என்று தாங்களே செய்தி வெளியிட்டு தாங்களே படித்து மகிழ்கிறார்கள் புலி ஆதரவாளர்கள்//
http://www.sundaytimes.lk/101003/News/nws_02.html
மேலே உள்ள ஸ்ரீலங்காவின் சண்டே ரைம்ஸ் செய்தியைப்படியுங்கள். சன்டே ரைம்ஸ் எபோதிருந்து புலி ஆதரவாளர்களாகினர்?
மேலும் அந்த போட்டோ மஹிந்தா ஏற்பாடு செய்த பாட்டியில் எடுக்கப்பட்டதல்ல மாறாக அமெரிக்க அதிபர் ஒபாமா உலகத் தலைவர்கள் எல்லோருக்குமாக ஏற்பாடுசெய்த (விருந்தோம்பல் அடிப்படையில்) விருந்தில் எடுக்கப்பட்ட படம்! அவ்விருந்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் அமெரிக்க அதிபருடம் படம் எடுக்க ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும் (பொதுவாக 10 செக்கண்டுகள் , 192 நாடுகள் X 10 = 1920, 1920/60 = 1/2 மணித்தியாலங்கள் படம் எடுக்க மட்டும் ) ஒபாமா படம் எடுப்பதை விடுங்கள். ஆனானப்பட்ட இரானிய அதிபர்கூட மஹிந்தாவின் பாட்டிக்கு போகவில்லையாமே ‘புலி ஆதரவு சண்டே ரைம்ஸ் சொகிறதே? உண்மையா?
நந்தா
கோதபாய குண்டு வெடிப்பில் இறந்து விட்டார் என்று போத்தல் அடித்துக் கொண்டாடிய கூட்டங்கள் இருக்கும் வரையில் புலிப் புலுடாக்களுக்குப் பஞ்சம் கிடையாது!
சாந்தன்
//…கோதபாய குண்டு வெடிப்பில் இறந்து விட்டார் என்று போத்தல் அடித்துக் கொண்டாடிய கூட்டங்கள் இருக்கும் வரையில் புலிப் புலுடாக்களுக்குப் பஞ்சம் கிடையாது!//
பிரேமதாசா குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டபோது “தொலைந்தான் பாவி, எடுங்கள் ஷம்பெய்னை” எனச் சொன்ன சொன்ன சந்திரிக்காவை “பொத்து வாயை” என தான் அடக்கியதாகச் சொன்னதாக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சொல்லி இருந்தார் (அப்போது சந்திரிக்காவுக்கும் சிறீமாவுக்கும் சிக்கல் நிலை இருந்தது). சொல்லப்போனால் பயங்கரவாதி புலி போத்தல் உடைத்தது ஆனால் ஜனனாயக சிங்கம் ஷம்பெய்ன் உடைத்தது. என்ன சொன்னாலும் மேன்மக்கள் அல்லவா? நீங்கள் ஸ்ரீமாவோ அம்மையாரை சந்தித்தேன் என்கிறீர்கள். இந்தச் சம்பவம் சொல்லவில்லையா?
பார்த்திபன்
// (பொதுவாக 10 செக்கண்டுகள் , 192 நாடுகள் X 10 = 1920, 1920/60 = 1/2 மணித்தியாலங்கள் படம் எடுக்க மட்டும் )- சாந்தன் //
ஆமா நீங்கள் வாழ்க்கையில் இதுவரையில் புகைப்படக் கருவியை பாவித்ததே இல்லையா?? 10 செகண்டில் வந்தவர்கள் ஒழுங்காக நின்று படத்தை எடுக்க முடியுமா??
நந்தா
பிரேமதாசா கொல்லப்பட்டதற்கும் புலி வால்கள் சாராயம் அடித்தார்கள். அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? முதுகில் குத்துவதில் அல்லது அடுத்துக் கெடுப்பதில் தமிழர்கள் வல்லவர்கள் என்று புகழப் போகிறீர்களா?
அது சரி சந்திரிகா ஷம்பெயின் உடைத்தார் என்று உங்களுக்கு யார் சொன்னது? என்னை விட சிரிமாவோ வீட்டுடன் நல்ல பரிச்சயம் சாந்தனுக்கு இருக்கிறது!
மாயா
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகின்றமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரண்டாவது தடவையாக அழைக்கப்பட்டுள்ளார்.
————————————
இப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் நாட்டின் தலைவர் ஒருவர் உரை நிகழ்த்துகின்றமைக்கு இரண்டாவது தடவையாகவும் அழைக்கப்பட்டிருக்கின்றமை இதுவே முதல் தடவை ஆகும்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஜேம்ஸ் கிங்ஸ்ரன் இதற்கான அழைப்பை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து மகத்தான சாதனையை ஜனாதிபதி சர்வதேச மட்டத்தில் நிலைநாட்டி உள்ளார் என்று ஜேம்ஸ் ஒன்றியத்தின் சார்பில் இவ்வழைப்பிதழிலில் புகழ்ந்துள்ளார்.
– News
BC
//பார்த்திபன் – 10 செகண்டில் வந்தவர்கள் ஒழுங்காக நின்று படத்தை எடுக்க முடியுமா?? //
அதை பற்றி யோசிக்காமல் எப்படியெல்லாம் சந்தோசப்படுகிறார்கள் !தயா வாத்தியார் சொன்னது தான் சரி.புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க நினைக்கின்றமையும் புலிக் கொள்கைகளை பரப்புகின்றமையும் பிரயோசனமற்ற காரியங்கள் என்பதை புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் விரைவில் புரிந்து கொள்ளும். புலிகள் சார்பு சக்திகளுக்கு இனி சர்வதேச அரங்கில் இடம் கிடையாது.புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் புலிச் சார்புச் சிந்தனையில் இருந்து விடுபட்டுத் தமிழ் மக்களின் நலனுக்காகப் பாடுபட வேண்டும்.