சிறைச் சாலையில் விடுதலைப்புலி உறுப்பினர்களும் உள்ள நிலையில் சிறையிலடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவிற்க புலிகளால் அச்சறுத்தல் உள்ளதெனவும், அவ்வாறு எதுவும் நடந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பிரதித் தவைருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
வெலிக்கடைச் சிறையில் வைக்கப்பட்டுள்ள சரத்பொன்சேகாவை நேற்று திஙகள் கிழமை கரு ஜயசூரிய சென்று பார்வையிட்டார் அதன் பிறககு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சரத்பொன்சேகாவின் உயிருக்கு சிறைச்சாலையில் அச்சுறுத்தல் உள்ளது. பயங்கரவாத த்தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சரத்பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்துள்ளது என அவர் தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கல் காரணமாகவே சரத்பொன்சேகா இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார் எனவும், ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தின் இவ்வாறான ஜனநாயக விரோதச் செயல்களைக் கண்டித்து நாடு முழுவதும் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
mohan
கருஜயசூரிய, சரத்துகு;கத்தானே புலிகள் ஆதரவு கொடுத்தவை. பிறகேன் அவருக்கு புலிகளால் ஆபத்து வரப்போகுதென வெருட்டுகிறியள். அவர் மகிந்தா ஓடரை பொலோ பண்ணினவரேயொழிய அவர் தங்கக்கம்பி என்றதானே அவரை ஜனாதிபதியாக்க புலிகள் முயற்சித்தவை.
பல்லி
//சரத்பொன்சேகாவின் உயிருக்கு சிறைச்சாலையில் அச்சுறுத்தல் உள்ளது.//
இதை நாம் முழுமையாக புறம்தள்ளிவிட முடியாது; சரத்துக்கு ஏதும் நடக்கலாம் ஆனால் அது புலிகளால் என்பது வேடிக்கை; ஆனால் அவருக்கு ஏதாவது நடந்தால் அது புலிகளால் நடந்தது என்பது முடிவாகிவிடும், ஏற்கனவே இதில் எமக்கு அனுபவம் உண்டு மாற்று கருத்தாளர்களை அவர்கள் நண்பர்களே தாக்கி விட்டு புலி மீது பழி போட்டது போல் நடக்கலாம்; ஆனால் புலியால் சிறையில் தம்மை கடிக்கும் மூட்டை பூச்சியை கூட தண்டிக்க முடியாது என்பது உலகறிந்த உன்மை,