ஜனநாயகத் தேசிய கூட்டமை ப்பு கொழும்பு மாவட்ட எம். பி. சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம்மிக தசனாயக்க நேற்று (7) தேர்தல் ஆணை யாளருக்கு அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 66-டீ சரத்தின் பிரகாரம் இந்த பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். மேற்படி சட்டத்தின்64-ளி சரத்தின் படி பாராளுமன்ற பதில் செயலாளர் இதனை அறிவித்து ள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவு க்கு 30 மாத கடூழிய சிறைத்தண் டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதற்கு முப்படைகளின் தளப தியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் 29ம் திகதி அங்கீகாரம் வழங்கினார். இதனடிப்படையில், பொன்சேகாவுக்கு எதிரான தண்டனை 30 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டதோடு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சரத் பொன்சேகாவின் வெற்றிடத்திற்கு கொழும்பு மாவட்டத்தில் இருந்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு பட்டியலில் அடுத்ததாக உள்ள லக்ஷ்மன் நிபுனஆரச்சி நியமிக்கப்பட உள்ளதாக அறியவருகிறது.
ஆனால் இதனை ஏற்காத ஜேவிபி, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக நீதிமன்றம் செல்கிறது. “சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டது சட்ட விரோத செயல்” என, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ராணுவ நீதிமன்றம் பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் உறுப்பினர்களின் பதவி பறிப்பு போன்றவற்றில் இறஙகுவது ஆபத்தானது என்றும், இதனை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது ஜேவிபி
இதேவேளை, சரத் பொன்சேகாவின் எம். பி. பதவி வெற்றிடமாக இருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் அறிவித்திருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் பிரியங்கா ஜயரட்ன, அரசியலமைப்பின் பிரகாரம் சட்டபூர்வமாகவே பாராளுமன்ற செயலாளர் அறிவித்துள்ளதாகக் கூறினார்.
மாயா
என்ன செய்யிறது சரத் மகத்தயா. யுத்த காலத்தில படைகளில இருந்த ஊழல் பேர்வழிகளை இருந்த பதவிகளில இருந்து இறக்கி உள்ள போட்டீங்களாம். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே ஊழல் செய்து வந்து குழுக்களுக்கு பாரிய அடி கொடுத்திருகீங்க. உங்கள் அதிரடி நடவடிக்கையால ஏகப்பட்ட பேருக்கு வயித்தில அடி விழுந்திருக்கு. அவங்கதான் உங்களை போடுறதுக்கு பிளானே போட்டும் கொடுத்திருக்காங்க. அதிலயும் தப்பிட்டீங்களாம்.
அதுக்கு பிறகு அரசியல் என்று போய் சேர்ந்த குழு ; ரொம்ப மோசமான குழுவா ஐதேகவும் சுதந்திரக் கட்சியும் நினைச்சிருக்கு. வெளியில ஒரு தோற்றம் உள்ள ஒரு தோற்றமா உங்க நடவடிக்கைளை அவதானிச்சிருக்கு. போதாக் குறைக்கு பசிலை முட்டி போட வைப்பேன்: கோட்டாவை கோல்பெசில மக்கள் முன் சுட்டு தள்ளுவேன் : மகிந்தவை போர் கைதியாக்கி தண்டிப்பேன் என்றெல்லாம் இராணுவ சட்டமா பகிரங்கமா வேற பேசினீங்க. வந்த பிறகு செய்திருக்கலாம். முன்னால தவளை மாதிரி கத்தியிருக்கீங்க.
அது போதாதென்று கடைசி நேரத்தில மகிந்த வென்றா ; நாட்டை உங்க கட்டுப்பாட்டில கொண்டு வர உங்க நட்பு இராணுவத்தினரை விடுதியில கொண்டு வந்து குவிச்சீங்க. எல்லாமே மண்ணாயிடுச்சு. படையில களவெடுத்தவனெல்லாம் ; உங்களையே கேள்வி கேட்டு நீதி வழங்கிட்டான். பல விசயங்கள் நீங்க செய்தது சரி. சில விசயங்கள் சற்று ஓவர்.
புலிகளை அழிக்க பல வருசமாகும் என்றவங்களையும் : முடியவே முடியாது என்கிறவங்களையும் பரிகசித்து ; கோடு போட்டு முட்டியில வைக்கிறேன் என்று சொல்லி ; சொன்னதை செஞ்ச தீரன் நீங்கதான். இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டதா உங்க நண்பர்களே சொல்றாங்க. வருத்தப்படுறாங்க. எப்படி இருந்த நீங்க இப்பிடி ஆயிட்டீங்களே என்று நினைச்சா………….
கருணாவுக்கு : பிள்ளையானுக்கு : டக்ளசுக்கு : தயாவுக்கு மன்னிப்பு கொடுக்கல்லயா? சரத்துக்கு ஏன் மன்னிப்பு கொடுக்க மாட்டேன்கிறாங்க என்று பிக்குகள் கேட்கிறாங்க. துணி உருவிய பிக்கு மாதிரி இப்போதைய சரத் நிலமை என்கிறார் ஒரு நண்பர். அவங்க யாருமே மகிந்தவ முட்டி போட வைக்கிறதா சொன்னாங்களா? இவரு சொன்னாரே என்கிறார்கள்? உண்மைதானே?
யார் என்னதான் கத்தினாலும் மாத்தறை மகத்தயா மாறப் போவதில்லையாம்.