சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்வரும் 18ஆம் திகதி யாழப்பாணத்திற்கு வந்து வடமராட்சிப் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிடவுள்ளனர். 21ஆம் திகதி வரை இப்பகுதிகளைப் பார்வையிடும் செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக்குழுவினர் வடமராட்சியில் 1.6 மில்லியன் நிதிச்செலவில் குடிநீர்விநியோகத்திட்டம் ஒன்றை தேசிய வடிகாலமைப்புச்சபையுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளமை குறித்தும் ஆராயவுள்ளனர்.
அவுஸ்திரேலிய செஞ்சிலுவைச்சங்கம் வடமராட்சிக்கிழக்கில் மீள்குடியமர்ந்தவர்களுக்கு வழங்குவதற்கென கட்டப்பட்டு பின் இடைநிறுத்தப்பட்ட வீடைப்புத் திட்டத்தை மீளவும் தொடர்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் யாழ்.பிரிவின் செயலாளர் எஸ்.பாலகிருஸ்ணன் இத்தகவல்களை தெரிவித்துள்ளார்.