உடும்பு கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது. தமது காணியைத் துப்புரவாக்கிய போது அங்கு காணப்பட்ட உடும்பு ஒன்றைப் பிடித்து வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் பொலிஸாரிடம் அவர் சிக்கிக்கொண்டார். கொடிகாமம் பொலிசார் மிருகவதைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதவான் எம்.எம். அப்துல்லா குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பின்பு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்ததோடு உடும்பை விடுவிக்குமாறும் உத்தரவிட்டார்.
வடக்கின் கிராமங்களில் காணப்படும் உடும்புகளைப் பிடித்து இறைச்சியாக்கி உண்பது கிராம மக்களின் சாதாரண பழக்க வழக்கமாகவுள்ள நிலையில், உடும்பைப் பிடித்தால் மிருகவதைச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் என்பது சாதாரண கிராம மக்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.