யாழ்ப்பாணத்தில் மாற்று வலுவுள்ளோர் (ஊனமுற்றோர்) சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் செயற்கை உறுப்புக்களை வழங்கும் ஜெய்ப்பூர் நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
250 மாற்று வலுவுள்ளோர் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட பொறிமுறையின் கீழ் மாற்று வலுவுள்ளோருக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அதிகாரி, இவ்வாறானோருக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்கும் மருத்துவ அதிகாரி ஆகியோர் கொழும்பிலேயே இருப்பதால் யாழ்ப்பாணத்தில் பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வதிகாரிகள் யாழப்பாணத்திற்கு வருகை தந்து மாற்று வலுவுள்ளோருக்கான சாரதி பரீட்சைகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.