தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் 15 நாட்களுக்கு முன்னர் காணப்பட்ட வீடுகள் தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக எழுதுமட்டுவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எழுதுமட்டுவாழ் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தங்களது வீடுகளை பார்வையிடுவதற்காக சென்ற போது நாகர்கோவில் வீதியிலிருந்த 267 வீடுகளில் இரு வீடுகள் தவிர்ந்த ஏனைய வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவித்தனர். தங்கள் காணிகளிலிருந்த பயன்தரு மரங்களும் தறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் குடியிருப்புக்கள் மழைய நிலைக்குத் திரும்ப நீண்டகாலம் எடுக்கும் எனவும் இம்மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
Rohan
மகிந்த சிந்தனை நீடு வாழ்க!
karu
புலிகளின் புத்தியில்லாத போராட்டத்தின் விளைவுகளில் சில நாம் அனுபவித்தே தீர வேண்டியதாயிற்று.
karuna
எது நடந்தாலும் அரசை சுட்டிக்காட்டுபவர்கள் முதலில் உண்மையை தெரிந்து செய்திகளையும் பின்னோட்டங்களையும் விடுவது நல்லது. வீடுகள் உடைப்புக்கு காரணம் அரசு அல்ல. தமிழர்களே! வீட்டுத்தளபாடங்களை களவுசெய்பவர்கள் இதை ஒரு தொழிலாகவே செய்கிறார்கள். இதனால் தற்போது மீளவும் பல பகுதிகளிற்கு செல்ல இராணுவத்தின் அனுமதிப்பத்திரம் தேவை. ஒரு இடத்தில் மீள குடியமர அனுமதித்ததும் இரவோடு இரவாக சொந்தக்காரர்கள் மீள குடியேற முன்பே தளபாடங்கள் களவாடப்பட்டு வீடுகள் இடிக்கப்ட்டுள்ளது. இது இங்கு மட்டும் நடைபெறவில்லை. வேறு இடங்களிலும் நடைபெற்றுள்ளது.