பாராளு மன்றத்தில் சரஸ்வதி பூஜை நேற்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பாராளுமன்ற முன்வாயில் மண்டபத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமான சரஸ்வதி பூஜையில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், பிரதி சபாநாயகர் பிரியங்க ஜயரட்ண மற்றும் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டனர்.
சரஸ்வதி பூஜையைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. சரஸ்வதி பூஜைக்காகப் பாராளுமன்ற முன்வாயில் மண்டபம் வாழை,மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பாராளுமன்ற ஊழியர்கள் பலரும் கலந்துகொண்ட அதேவேளை, வெளியிலிருந்தும் பலர் வந்திருந்தனர்