வர்த்தக மற்றும், கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள முஸ்லிம் மக்களின் நலன் குறித்து ஆராய்ந்தார். யாழ்ப்பாணத்தில் 20 வருடங்களுக்குப்பின் நேற்று மானிப்பாய் வீதியிலுள்ள பெரிய முகைதீன் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜும்ஆ வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டதுடன், கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இஸ்லாமிய கலை நிகழ்வில் பங்கு பற்றியதோடு, யாழ். ஒஸ்மானியாக் கல்லூரிக்குச் சென்று அங்கு முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரிச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். அங்கு முஸ்லிம் பள்ளிவாசல் காணியில் வசிக்கும் எட்டு குடும்பங்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
பின்னர் யாழ்.சோனகத்தெருவிற்கு சென்று அங்குள்ள வீதிகளை அபிவிருத்தி செய்தல், வடிகால் புனரமைப்பு, மின்சார வசதிகளை சீர்செய்தல் முதலான பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்ககு பணிப்புரை விடுத்தார்.
யாழ்.வருவதற்கு முன்னதாக கிளிநொச்சிக்குச் சென்ற அமைச்சர் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளான நாச்சிக்குடாவிற்குச் சென்று அங்குள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் அடுத்த மாதம் 10ஆம் திகதி யாழ். மாநகரசபையின் பிரதி மேயராக முஸ்லிம் ஒருவர் பதவியேற்கவுள்ளதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் படி ஒரு வருடத்தின் பின் பிரதி மேயர் பதவியை முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவது என முடிவெடுக்கப் பட்டமையையும் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நினைவு படுத்துவதற்காக தாம் யாழ்ப்பாணம் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Kusumpu
//வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள முஸ்லிம் மக்களின் நலன் குறித்து ஆராய்ந்தார்//
இவர் முஸ்லீங்களுக்கு மட்டும்தான் வர்த்தக கைத்தொழில் அமைச்சரா? அல்லது முழு இலங்கைக்குமா. யாழ்பாணம் போனால் தனக்குக் கொடுக்கப்பட்ட மந்திரி பதவிக்கேற்ப தொழிலை சரிவரச்செய்வதை விட்டுவிட்டு எது என்ன முஸ்லீம் மக்கள்பற்றி சிறப்பு ஆராய்வு. நாங்கள் நாட்டையும் அரசையும் துண்டாடுவோமா? முஸ்லீம்களுக்கு தமிழர்களுக்கு சிங்களவர்களுக்கு என்று தனித்தனி வர்த்தக கைத்தொழில் அமைச்சர்களை நியமிப்போமா? அப்ப இந்துக்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு சிங்களவர்களுக்கு யார் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் என்று யாராவது எழுதினால் நாங்களும் அறிந்த கொள்ளலாம் அல்லவா
karu
நீங்கள் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகளை ஆராய யாழ் வரலாம் சிங்கள மக்களின் பிரச்சினைகளை ஆராய சிங்கள எம்பிக்கள் வரலாம் டக்ளஸ்டன் ஏற்பட்ட ஒப்பந்தம்படி முஸ்லீம் மாநகர மதல்வர் வரவேண்டும்.
பொலநறுவையில் உள்ள தமிழரை பார்க்க யார்போவது மூதூரில் தமிழர்க்கு பிரதிநிதித்துவம் கிடைக்க எப்படி வழிசெய்வீர்கள்
முஸ்லீம்களும் சிங்களவர்களும் தமிழரின் முதுகில் சவாரி செய்கிறீர்கள் எவ்வளவு காலம் இந்த சவாரி என்று பார்ப்போம்.
மூதூரில் உள்ள தமிழ் காணிகள் முஸ்லீம்களால் பறிக்கப்பட்ட தமிழரின் காணிகளின் நிலைஎன்ன?
சிங்களவர்களுக்கு சிங்கள நாடாக்க வேண்டும் முஸ்லீம்களுக்கு இஸ்லாமிய நாடாக்க வேண்டும் நாம் தமிழர்கள் இடையில் இழுபட்டு ஒன்றும் இல்லாமல் போக வேண்டும்.
Bambu
Hello guys,
Stop your arguments and complaints. One civil war between the Sri Lankan forces and LTTE is enough to learn about the polarizations. Please think about wisely rather complaining other ethnic groups
Bambu