அவுஸ் திரேலியாவுக்காக தங்கப் பதக்கங்கள் வென்ற இலங்கைத் தமிழன் பிரஷாந்த் கொமன்வெல்த் போட்டியில் சாதனை டெல்லி கொமன்வெல்த் போட்டியில் ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் இலங்கை பிரஷாந்த் செல்லத்துரை. அவுஸ்திரேலியாவுக்காக விளையாடி வருகிறார் இந்த ஜிம்னாஸ்ரிக்ஸ் வீரர்.
சர்வதேச அரங்கில் தமிழர்களின் முத்திரை தற்போது அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் இப்போது டெல்லி கொமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் முதலிடத்திலிருக்கும் அவுஸ்திரேலியாவுக்காக ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
அவரது பெயர் பிரஷாந்த் செல்லத்துரை. பூர்வீகம் இலங்கை. இவரது குடும்பத்தினர் இலங்கையில் இனக்கலவரம் பெரிதாக வெடித்த 1983 ஆம் ஆண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்றனர். தற்போது சிட்னியில் வசித்து வருகிறது செல்லத்துரையின் குடும்பம். பிரஷாந்த் அவுஸ்திரேலிய ஜிம்னாஸ்ரிக்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர். அவுஸ்திரேலியாவுக்காக டெல்லி கொமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்று கொடுத்துள்ளார்.
டெல்லி கொமன்வெல்த் போட்டியில் இரு போட்டிப் பிரிவுகளில் கிட்டத்தட்ட 15,000 புள்ளிகள் வரை பெற்றுள்ளார் பிரஷாந்த். ஜிம்னாஸ்ரிக்ஸ் போட்டிகளில் இந்தளவுக்கு அதிக பட்ச புள்ளிகள் கிடைப்பது மிகவும் அரிதான விடயம். அந்தளவில் பிரஷாந்த் ஒரு சாதனையே படைத்துள்ளார்.
24 வயதேயாகும் பிரஷாந்த் “ரேடியோலோ” மாணவர் அவுஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்தது பிரஷாந்த்துக்கு எளிதாக இருக்கவில்லையாம். கடும் போராட்டங்கள், கடின பயிற்சி, கடுமையான முயற்சிக்குப் பின்புதான் அணியில் இடம்கிடைத்தது. கடந்த மெல்போர்ன் கொமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் பிரஷாந்த். இந்த முறை தங்கத்துடன் திரும்புவேனென சபதமே போட்டிருந்தாராம். சொன்னபடி வாங்கியும் விட்டார். டெல்லி கொமன்வெல்த் போட்டியில் ஒரு ஈழத்தமிழர் அதுவும் தங்க வேட்டையாடி வருவது பெருமைக்குரிய விடயம் தான்.
தாமிரா மீனாஷி
அவர்கள் தம்மை அவுஸ்திரேலியத் தமிழர் என்றுதான் அழைக்க விரும்புகின்றனர்..(அவுஸ்திரேலிய குடியுரிமையும் பாஸ்போர்ட்டும் கிடைத்தவுடன்..)ஈழத் தமிழர்கள் என்று அழைக்க விரும்புவதில்லை.புதிதாக வந்த அகதிகளில் இருந்து தாம் வேறானவர்கள் என்று காண்பிப்பது முக்கியம்.. வேண்டுமானால் அவர்களுடைய தமிழ் வானொலிகளில் சில (முன்னாள்) பேராசிரியர்களின் வாக்கு மூலங்களைக் கேட்டுப் பாருங்கள்!